முகப்பு Bengaluru வாஸ‌ன் கண் பராமரிப்பு மருத்துவமனையில் 15 வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கான இலவச கண் பரிசோதனை

வாஸ‌ன் கண் பராமரிப்பு மருத்துவமனையில் 15 வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கான இலவச கண் பரிசோதனை

50
0

பெங்களூரு, நவ. 6: குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் நோக்கில், ஆர்.டி.நகர் வாஸ‌ன் கண் பராமரிப்பு மருத்துவமனையில் நவம்பர் 1 முதல் 30 வரை, 15 வயதிற்குக் குறைவான குழந்தைகளுக்காக இலவச வெளிநோயாளர் (OPD) கண் பரிசோதனை சேவையை அறிவித்துள்ளது.

இந்த முயற்சியின் நோக்கம், குழந்தைகளின் கண் ஆரோக்கியத்தை சிறு வயதிலேயே பரிசோதனை செய்வதையும், பெற்றோரிடத்தில் கண் பராமரிப்பின் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதையும் குறிக்கிறது.

இந்த நிகழ்வில் டாக்டர் பாருல் மற்றும் டாக்டர் ஹர்ஷிதா அவர்கள் தெரிவித்ததாவது: “கண்களில் ஏற்படும் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது, குழந்தையின் கல்வித் திறமையையும், அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது. இந்த முயற்சியின் மூலம், ஒவ்வொரு குழந்தைக்கும் சரியான நேரத்தில் சரியான கண் பராமரிப்பு கிடைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம்” என்றனர்.

கர்நாடகா முழுவதும் 18 முழுமையான வசதிகள் கொண்ட மையங்களைக் கொண்டுள்ள வாஸ‌ன் கண் பராமரிப்பு மருத்துவமனை, குழந்தைகளுக்கான சிறப்பு கண் மருத்துவ சேவைகள் உள்ளிட்ட முன்னேற்றமான பரிசோதனை மற்றும் சிகிச்சை வசதிகளை வழங்குகிறது. சமூக கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், இலவச கண் பரிசோதனைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

ஆர்.டி. நகர் கிளையில் நடந்த இந்த நிகழ்வில், நாராயணா பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். டாக்டர் பாருல், டாக்டர் ஹர்ஷிதா மற்றும் டாக்டர் தீக்ஷா ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அருகிலுள்ள வாஸ‌ன் கண் பராமரிப்பு மருத்துவமனைக்கு அழைத்து வந்து, இந்த இலவச கண் பரிசோதனை சேவையின் பயனைப் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்