முகப்பு Awards எஸ்எஸ்எல்சியில் 90 சதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மடிவாளா சமுதாய மாணவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு

எஸ்எஸ்எல்சியில் 90 சதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மடிவாளா சமுதாய மாணவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு

0

பெங்களூரு, மே 25: எஸ்எஸ்எல்சியில் 90 சதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மடிவாளா சமுதாய மாணவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

இது குறித்து கர்நாடக மாநில மடிவாளா சங்கத்தின் மாநில தலைவர் சி.நஞ்சப்பா வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: 2023 ஆம் ஆண்டில் எஸ்எஸ்எல்சியில் 90 சதத்திற்கு மேல் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மடிவாளா சமுதாய மாணவர்களுக்கு மாநில அளவில் விருது வழங்கி கௌரவிக்க முடிவு செய்துள்ளோம்.

எனவே, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தகுதியான மடிவாளா சமுதாய மாணவர்கள் நேரடியாக மாவட்ட மற்றும் தாலுகா சங்கங்கள் மூலமாகவோ அல்லது மாநில சங்கத்திடம் அவர்களின் 2023 ஆம் ஆண்டின் மதிப்பெண் பட்டியல் மற்றும் அண்மையில் எடுக்கப்பட்ட 2 புகைப்படங்கள் மற்றும் ஆதார் அட்டை மற்றும் நிரந்தர முகவரி மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை, கர்நாடக மாநில மடிவாளா சங்கம் (பதிவு) எண்: 7, ஷிரூர் பார்க் ரோடு. சேஷாத்ரிபுரம் பெங்களூர் 20 என்ற முகவரிக்கு ஜூன் 30 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தகுதியான மாணவர்களுக்கு ஜூலை மாத இறுதி வாரத்தில் வழங்கப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு மத்திய சங்க தொலைபேசி எண். 08023460946 மற்றும் பொதுச் செயலாளர் பி.ஆர்.பிரகாஷ் அலைபேசி எண். 96116 64485, பணியாளர்கள் குழுவின் துணைத் தலைவர் ஜி.எம்.சங்கரப்பா அலைபேசி எண் 98448 63818, முதன்மை அமைப்பாளர், பிரபாகர் ஏ அலைபேசி எண். 9945421124 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த செய்தியை மடிவாளா சமுதாய உறவினர்களுக்கு பரவலாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

முந்தைய கட்டுரைஓசோடெக் நிறுவனத்தின் புதிய மின் இருசக்கர வாகனம் பீம் அறிமுகம்
அடுத்த கட்டுரைபி.என். ராவ் நூற்றாண்டு விழா: ஆடம்பரத் துணிகளில் முன்னுதாரண மாற்றம் குறித்து முக்கியத் தலைவர்கள் கருத்து

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்