முகப்பு National மாற்று திறனாளிகளின் திறமைகளை ஊக்குவிக்க வேண்டும்: மத்திய இணையமைச்சர் நாராயணசாமி

மாற்று திறனாளிகளின் திறமைகளை ஊக்குவிக்க வேண்டும்: மத்திய இணையமைச்சர் நாராயணசாமி

0

பெங்களூரு, ஜன. 6: தென் பிராந்திய 4 மாநிலங்களில் இருந்து 75 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட “திவ்ய கலா சக்தி- மாற்றுத்திறனாளிகளின் திறன்களைக் கண்டறிதல்” என்ற தனித்துவமான நிகழ்ச்சியில் கர்நாடக மாநில ஆளுநர், மத்திய மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத்துறை, சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சர் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

தமிழ்நாடு சென்னைக்கு அருகில் உள்ள முட்டுக்காட்டில் இயங்கிவரும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவன நிறுவனமும், இந்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத்துறை, சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகமும் இணைந்து கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களுரில் மாற்றுத்திறனாளிகளின் தனித்துவமான திறன்களைக் கண்டறிந்து அதை வெளிப்படுத்த “திவ்ய கலா சக்தி” என்ற கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

ஜனவரி 6 ஆம் தேதி ரவீந்திர கலாக்ஷேத்ரா கலைஅரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கர்நாடகா ஆளுநர் தாவர் சந்த் கெஹலோட் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடக்கிவைத்தார். மேலும் மத்திய மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத்துறை, சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் இணை அமைச்சர் நாராயணசாமி கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்

திவ்ய கலா சக்தி என்ற இந்த கலாசார நிகழ்வானது, கலை, இசை, நடனம், அக்ரோபாட்டிக்ஸ், யோகா மற்றும் பல திறமைகள் கொண்ட மாற்றுத்திறனாளிகள் தங்கள் தனித்துவமான திறனை வெளிப்படுத்த இந்த கலைநிகழ்ச்சி ஏற்படுத்தி கொடுக்கிறது. திவ்ய கலா சக்தி கலை நிகழ்ச்சியில் 4 தென் மணடல மாநிலங்களான கர்நாடகாத்திலிருந்து 42 பேர், தமிழ்நாட்டிலிருந்து 17 பேர், கேரளா மாநிலத்திலிருந்து 9 மற்றும் புதுசேரிலிருந்து 7 பேர் உள்ளிட்ட அனைந்து மாநிலங்களில் இருந்து மொத்தம் 75 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களிடம் உள்ள தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 152 மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் இலவச உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.12 .69 லட்சம் மதிப்புள்ள கற்றல் மற்றும் கற்பித்தல் சாதனங்கள், காது கேட்கும் கருவி, மூன்று சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி, ஊன்று கோல், ஸ்மார்ட் போன் போன்ற உபகரணங்களை மத்திய இணையமைச்சர் முன்னிலையில் ஆளுநர் வழங்கினார்.

பின்னர் பேசிய மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, மத்திய மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத்துறை, சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் சார்பில் இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, மாற்று திறனாளிகளை ஊக்குவித்து வருகிறேன். மாற்றுத்திறனாளிகளிடம் அபரிதமான திறமை உள்ளது. அவர்களிடம் திறமையை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்.

இங்கு நடந்த நிகழ்ச்சியில் பல மொழிகளில் பாடிய அவர்களின் திறமையை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். 48 ஏக்கரில் இரண்டாவது மருத்துவமனை பெங்களூரில் அமைக்கப்படும். இது தொடர்பான ஆவணங்களை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளோம். விரைவில் இந்த மருந்துவமனை கட்டப்பட்டு, திறக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் துறை இயக்குன‌ர் நசிகேதா ரௌட், மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையர்தாஸ் சூர்யவம்சி, பெற்றோர்கள், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள் உள்பட‌ பலர் கலந்து கொண்டனர்.

முந்தைய கட்டுரை2023 ஆண்டு காயன் டிசிஎக்ஸ் அறிக்கை வெளியீடு
அடுத்த கட்டுரைகாயின் டிசிஎக்ஸ் (COINDCX): $1m முதலீட்டாளர்களுக்கு இணங்காத ஆஃப்-ஷோர் எக்ஸ்சேஞ்ச்களில் இருந்து காயின் டிசிஎக்ஸ்-எக்ஸ்சேஞ்சிற்கு சொத்துக்களை மாற்ற உதவுவதற்காக திரட்டப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்