முகப்பு Politics மார்ச் 16ல் மாநில திமுக இலக்கிய அணி சார்பில் மு.க.ஸ்டாலினின் 71 வது பிறந்த நாள்...

மார்ச் 16ல் மாநில திமுக இலக்கிய அணி சார்பில் மு.க.ஸ்டாலினின் 71 வது பிறந்த நாள் விழா

0

பெங்களூரு, மார்ச் 9: கர்நாடக மாநிலத் திமுக இலக்கிய அணி சார்பில் திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான‌ மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்தநாள் விழா பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் அன்று பிற்பகல் 3 மணியளவில் கர்நாடக மாநில திமுக பொதுக் குழு உறுப்பினர் இரா.அன்பு தமிழ் தாய் வாழ்த்து பாடி வரவேற்புரை ஆற்றுகிறார். கர்நாடக மாநிலத் திமுக இலக்கிய அணி செயலாளர் போர்முரசு கதிரவன் தலைமை தாங்குகிறார்.

கவிமலர் வ.மலர்மன்னன சி.வரதராஜன் மாநில இலக்கிய அணி துணைத்தலைவர் சி.கண்ணன் வெள். செல்வகுமார், மு.பழனி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந. இராமசாமி, மாநில அவை தலைவர் மொ.பெரியசாமி, மாநில பொருளாளர் கே.தட்சிணாமூர்த்தி, மாநில துணை அமைப்பாளர் ஜி ராமலிங்கம், மாநில திமுக துணை அமைப்பாளர் குமுதா கருணாநிதி கர்நாடக மாநில திமுக முன்னாள், இந்நாள் கிளைக் கழக நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா, ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், தலைமை இலக்கிய அணி பொருளாளர் ந.சந்திரபாபு, வேலூர் மாவட்ட இந்து அறநிலைத்துறை தலைவர் அசோகன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். இந்த விழாவில் வி.எஸ்.மணி, செ.தமிழ்ச்செல்வன், ஏ.டி. ஆனந்தராஜ், கே எஸ் சுந்தரேசன், கேஜிஎப் கரிகாலன், ஆ.கரிகாலன், கர்நாடக மாநில திமுக இளைஞரணி அமைப்பாளர் டி.சிவமலை, துணை அமைப்பாளர்கள் டி.விகாஷ், பரசுராம், டி.ராஜசேகர், முருகானந்தம், லியோ, விக்ரம், பொன்னியின் செல்வன், கர்நாடக மாநில திமுக மகளிர் அணி செயலாளர் சற்குணம் இளமதி, துணைச் செயலாளர்கள் மங்கம்மா, காயத்ரி பிரபு ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

கிளைக் கழக துணை செயலாளர் மு.தாமோதரன் நன்றி கூறுகிறார். இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்தக் கருத்தரங்கத்திற்கு புலவர் கி.சு.இளங்கோவன் தலைமை தாங்குகிறார். மிசா ஸ்டாலின் என்ற தலைப்பில் இரா.அன்பு, மேயர் ஸ்டாலின் என்ற தலைப்பில் அமுத பாண்டியன் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் என்ற தலைப்பிலும், சற்குணம் இளமதி, துணை முதல்வர் ஸ்டாலின் என்ற தலைப்பில் தங்கவயல் கரிகாலன், முதல்வர் ஸ்டாலின் என்ற தலைப்பில் வி.எஸ்.மணி ஆகியோர் உரையாற்றுகின்றனர். இதைத் தொடர்ந்து சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முந்தைய கட்டுரைஅமேசான் இந்தியாவின் 49 வது சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம்: 49 பெண்களுக்கான‌ நன்மைகள் மற்றும் மேம்படுத்தும் முயற்சிகள்
அடுத்த கட்டுரைலுலு வாக்கத்தானில் பெரும் எண்ணிக்கையிலானோர் பங்கேற்பு

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்