முகப்பு Bengaluru உலக மாந்தர்கள் அனைவரும் திருவள்ளுவரைக் கொண்டாட வேண்டும்: பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ்

உலக மாந்தர்கள் அனைவரும் திருவள்ளுவரைக் கொண்டாட வேண்டும்: பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ்

0

பெங்களூரு, ஏப். 14: உலக மாந்தர்கள் அனைவரும் திருவள்ளுவரைக் கொண்டாட வேண்டும் என்று பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தெரிவித்தார்.

பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு, தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் ஜெயந்தியையொட்டி விஷ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தலைமையில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பைப்பனஹள்ளி டி.ரமேஷ் கூறியது: உலக மக்களின் வாழ்வியலை சிறப்பாக்க படைக்கப்பட்டதுதான் திருக்குறள். திருக்குறளைப்படத்தை திருவள்ளுவர் உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானவர். திருவள்ளூவர் தினத்தை ஜன. 16‍ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். எனவே அதனை மேலும் சிறப்பாக கொண்டாடும் வகையில், விஷ்வகவி திருவள்ளுவர் சங்கத்திற்கு மாவட்டம்தோறும் உறுப்பினர்களை சேர்க்க முடிவு செய்துள்ளோம். உலக மாந்தர்கள் அனைவரும் திருவள்ளுவரைக் கொண்டாட வேண்டும்.

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் ஜெயந்தி தினத்தன்று திருவள்ளுவரை கௌரவிக்க விரும்பு, அவரது சிலைக்கு நான் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் அனைவரும் திரளாக வந்து மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செய்து வணங்கி உள்ளோம். அதே போல தமிழர்கள் திருவள்ளுவர் தினத்தன்று மட்டுமே திருவள்ளுவர் சிலைக்கு வந்து மாலை அணிவித்து, மலர் தூவி கௌரவிப்பது மட்டுமின்றி அனைத்து நாளிலும் அவரை கௌரவிக்க வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள் என்றார்.

நிகழ்ச்சியில் வா.ஸ்ரீதரன், கோபிநாத், ஸ்ரீனிவாஸ், சுரேஷ், விஷ்வா உள்ளிட்ட ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

முந்தைய கட்டுரைஆன்மிக மாற்றம் புத்தகம் ‘இன் குவெஸ்ட் ஆஃப் குரு’ வெளியீடு
அடுத்த கட்டுரைசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்