முகப்பு Festival மு.க.ஸ்டாலின் ஆட்சி உலகமெங்கும் வழிகாட்டியாக திகழ வேண்டும்: ந.இராமசாமி

மு.க.ஸ்டாலின் ஆட்சி உலகமெங்கும் வழிகாட்டியாக திகழ வேண்டும்: ந.இராமசாமி

0

பெங்களூரு, ஜன. 15: தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெற்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி உலகமெங்கும் வழிகாட்டியாக திகழ வேண்டும் என்று கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தெரிவித்தார்.

பெங்களூரு ராமசந்திரபுரத்தில் உள்ள திமுக அலுவலகத்தின் ஞாயிற்றுக்கிழமை தைத்திருநாள் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் இனிப்பு பொங்கல், கரும்பு, தமிழ்நாடு பர்கூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ மதியழகன் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்த நாள்காட்டி வழங்கப்பட்டது.

பின்னர் பேசிய ந.இராமசாமி, தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி உலகமெங்கும் வழிகாட்டியாக திகழ வேண்டும். சிறந்த ஆட்சியை வழங்கி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நீடூடி வாழ வேண்டும். விரைவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் 40க்கு 40 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் மகளிர் உள்ளிட்ட அனைவருக்கும் நிதி உதவியும், பொங்கல் பரிசுகள் வழங்கிய முதல்வரின் ஆட்சியின் சிறப்பை திமுகவினர் மக்களிடத்தில் கொண்டு சென்று தேர்தலில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதன் மூலம் இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தை உருவாக்கும் சக்தியை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்க வேண்டும். அவர் கைகாட்டும் அரசு மத்தியில் அமைய வேண்டும். இந்தியா கூட்டணி நாடு முழுவதும் மாபெரும் வெற்றி பெற்று, சாதனை படைக்க வேண்டும்.

மதவாத ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அதற்காக தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை வலுப்பெறச் செய்ய வேண்டும். அவ‌ருக்கு கர்நாடக திமுக உறுதுணையாக இருக்கும் என்று கூறி, தமிழ்ப் புத்தாண்டான தைத்திருநாளில் இனிப்பு பொங்கல், கருப்பு, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் படங்கள் இடம்பெற்ற நாள்காட்டி வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

முந்தைய கட்டுரைதிருவள்ளுவர் ஜெயந்தி தின விழாவில் தமிழராய் ஒன்று திரளுவோம்: பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ்
அடுத்த கட்டுரைபெங்களூரில் திருவள்ளுவர் ஜெயந்தி தின‌விழா கோலகலமாக கொண்டாட்டம்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்