முகப்பு State மாநில அளவிலான ஆபரணத் திருவிழா: பங்கு பெறும் வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம், வெள்ளி பரிசு

மாநில அளவிலான ஆபரணத் திருவிழா: பங்கு பெறும் வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம், வெள்ளி பரிசு

0

பெங்களூரு, ஏப். 10: மாநில அளவிலான ஆபரணத் திருவிழாவில் பங்கு பெறும் வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் 1 கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளி பரிசு வழங்கப்படுகிறது.

இது குறித்து திங்கள்கிழமை பெங்களூரு பத்திரிக்கையாளர் சங்கத்தில் கர்நாடக மாநில நகைக்கடை கூட்டமைப்பின் தலைவர் ஸ்ரீகாந்த் காரி செய்தியாளர்களிடம் கூறியது: கர்நாடகா மாநில நகைக்கடை கூட்டமைப்பின் சார்பில், ஏப். 10 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை மாநில அளவில் ஆபரணத்திருவிழா நடைபெறுகிறது. இதில் 300 க்கும் அதிகமான நகைக்கடைகள் திருவிழாவில் பங்கேற்கின்றன.

சம்பந்தப்பட்ட நகைக்கடைகளில், ஆபரணத் திருவிழாவின் போது ரூ. 5 ஆயிரத்திற்கு மேல் ஆபரணம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூப்பன் வழங்கப்படும். பின்னர் அவர்களின் பெயர்களை குலுக்கல் முறையில் 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் பரிசாக 1 கிலோ தங்கம் வழங்கப்படும், மற்றவர்களுக்கு 5 கிலோ வெள்ளி பரிசாக வழங்கப்படும். நலிந்து வரும் நகைக் கடைகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திருவிழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.

பேட்டியின் போது கூட்டமைப்பின் பொருளாளர், ஒருங்கிணைபாளர் திவாகர் ஒ.வி, பொது செயலாளர் டாக்டர் ராமாச்சாரி, இணைச் செயலாளர் ராஜசேகர் என்.எஸ், இயக்குநர்கள் சுமேஷ் வதேரா, சுதர்சன் ஜெயின், மல்லிகார்ஜுன் ஷீலாவந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

கர்நாடக மாநில நகைக்கடை வியாபாரிகள் கூட்டமைப்பு பற்றி:
கர்நாடகா மாநில நகைக் கடை வியாபாரிகள் கூட்டமைப்பு (KJF) என்பது கர்நாடகாவின் அனைத்து 30 மாவட்டங்கள் மற்றும் 177 வட்ட‌களின் நகை வியாபாரிகளின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட மாநில அளவிலான அமைப்பாகும். தென்னிந்தியாவின் மிகப்பெரிய நகைக் கடை வியாபாரிகள் கூட்டமைப்பு உள்ள மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்றாகும்.

முந்தைய கட்டுரைசி.வி.ராமன் நகர் தொகுதில் ஆம் ஆத்மி கட்சிக்கு அமோக ஆதரவு: மோகன் தாசரி
அடுத்த கட்டுரைஇன்ஃபோசிஸ் திரும‌தி சுதாமூர்த்தி, ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் மடத்திற்கு “பத்ம பூஷண் விருதுடன்” வருகை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்