முகப்பு Bengaluru பெங்களூரில் திருவள்ளுவர் ஜெயந்தி தின‌விழா கோலகலமாக கொண்டாட்டம்

பெங்களூரில் திருவள்ளுவர் ஜெயந்தி தின‌விழா கோலகலமாக கொண்டாட்டம்

0

பெங்களூரு, ஜன. 16: பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை அருகே செவ்வாய்க்கிழமை திருவள்ளுவர் ஜெயந்தி தின விழாகுழு ஒருங்கிணைப்பாளர் பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தலைமையில் திருவள்ளுவர் ஜெயந்தி தின‌விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது.

இதில் அமைச்சர் ஜமீர் அகமதுகான், பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா, பெங்களூர் மத்திய தொகுதி பாஜக எம்.பி, பி.சி மோகன், சப்தகிரி கவுடா, கிருஷ்ணகிரி எம்.பி செல்வகுமார், எம்.எல்.ஏக்கள் ரிஸ்வான் அர்ஷத், என்.ஏ.ஹாரீஸ், சீனிவாஸ், சி.கே.ராமமூர்த்தி, திமுக அமைப்பாளர் நா.ராமசாமி, அவைத் தலைவர் மொ.பெரியசாமி, மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார்,

மாநில திமுக பொருளாளர் தட்சிணாமூர்த்தி, இலக்கிய அணி செயலாளர் போர்முரசு கதிரவன், பெங்களூர் தமிழ்த் சங்கத் தலைவர் தாமோதரன், உள்பட, காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் முக்கிய நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் விழாவில் கலந்து கொண்டு, திருவள்ளுவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். டொல்லு குனித்தா உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன

விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பைப்பனஹள்ளி ரமேஷ், எஸ்.எஸ். பிரகாசம் மறைவிற்கு பிறகு, கடந்த 2 ஆண்டுகளாக திருவள்ளுவர் ஜெயந்தி தினவிழா எனது தலைமையில் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். விழாவிற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மட்டுமின்றி, பாஜக, மஜத, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் முக்கிய நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் விழாவில் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்த‌து மகிழ்ச்சி அளிக்கிறது.

பிரிந்து கிடக்கும் தமிழ் பேசும் கன்னடர்களை ஒன்றிணைக்கு நோக்கில் திருவள்ளுவர் ஜெயந்தி தினவிழா கொண்டாடப்படுகிறது. இதில் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து தமிழர்கள் மட்டுமின்றி, கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், கட்சி, மதம், மொழி, ஜாதி உள்ளிட்ட பாகுபாடுகள் இன்றி கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் காலங்களில் திருவள்ளுவர் ஜெயந்தி தினவிழாவில் இதனை விட தமிழ் பேசும் கன்னட‌ர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு, தங்களது பலத்தை காண்பிக்க வேண்டும்.

இதன் மூலம் தமிழ் பேசும் கன்னடர்க‌ளுக்கு, ஆட்சியில் அதிகாரப்பதவிகள் கிடைத்தால், அதுபோன்றவர்கள் மேலும் ஊக்கமடைந்து தமிழ் பேசும் கன்னடர்க‌ளின் வளர்ச்சிகாக பாடுபடுவார்கள் என்று நம்புகிறேன். திருவள்ளுவர் ஜெயந்தி தினவிழா வெற்றி அடைய செய்த அனைத்து மக்களுக்கும், அமைப்பினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

முந்தைய கட்டுரைமு.க.ஸ்டாலின் ஆட்சி உலகமெங்கும் வழிகாட்டியாக திகழ வேண்டும்: ந.இராமசாமி
அடுத்த கட்டுரைதிருவள்ளுவர் ஜெயந்தி தின விழாவை மகத்தான வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றி

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்