முகப்பு Special Story பெங்களூரில் கர்நாடக தமிழர் ஒற்றுமைக்கான ஆலோசனைக் கூட்டம்: பெரும் திரளானவர்கள் பங்கேற்பு

பெங்களூரில் கர்நாடக தமிழர் ஒற்றுமைக்கான ஆலோசனைக் கூட்டம்: பெரும் திரளானவர்கள் பங்கேற்பு

0

பெங்களூரு, மே 12: பெங்களூரு அல்சூரில் தமிழ் ஆர்வலர் எஸ்.டி.குமார் தலைமையில் கர்நாடக தமிழர் ஒற்றுமைக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பெரும் திரளாக‌ தமிழர்கள், அமைப்புகள் கலந்து கொண்டு தங்களின் ஆலோசனைகளை வழங்கினர்.

பெங்களூரு அல்சூரு ஏரிக்கரையில் உள்ள யாதவா சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 12) தமிழ் ஆர்வலர் எஸ்.டி.குமார் தலைமையில் கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் ஒற்றுமைக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம், பிஇஎம்எல் தமிழ் மன்றம், நம்ம ஊர் தமிழ் மக்கள் குழு, தேசிய மனித உரிமை அமைப்பு, எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் ரசிகர் அமைப்பு, லைனஸ் குரூப் ஆப் கர்நாடகா, ஐடிஐ தமிழ் மன்றம் உள்ளிட்ட ஏராளமான அமைப்பினர், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ் வாழ்த்து பாடல், கன்னட வாழ்த்து பாடப்பட்டது. பின்னர் நம்மூர் தமிழ் மக்கள் குழுவின் சார்பில் நடனம் ஆடப்பட்டது. பின்னர் ஆலோசனை கூறிய‌ தனியார் கல்லூரியில் முதல்வராக பணியாற்றும் சிவகுமார், தமிழர்கள் கல்வியில், பொருளாதாரம் பின் தங்கி உள்ளனர். திருவள்ளுவர், பாரதியார் பெயரில் கூட்டுறவு வங்கிகளை தொடங்க வேண்டும். அறக்கட்டளை தொடங்க வேண்டும். உயர்கல்வியில் தமிழர்கள் முன்னெற வேண்டும் என்றார்.

டி.எஸ். கண்ணன் கூறியது: தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என்றார்.
தமிழ் ஆசிரியர் பார்த்திபன் கூறியது: தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் குறைவாக உள்ளனர். எனவே தமிழ்ப்படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்றார்.

கிருஷ்ணமூர்த்தி கூறியது: அரசியலில் தமிழர்கள் ஈடுபட வேண்டும் என்றார்.

எம்.எஸ்.ஆறுமுகம் கூறியது: 215 நாடுகளில் வாழும் தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை. அவர்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

ராஜகுரு பேசியது: சரியான அமைப்பு தமிழர்களுக்கு இல்லை. புதிய அமைப்பு தொடங்கி, தமிழர்கள் அனைவரும் உறுப்பினர்கள் ஆக வேண்டும். அந்த அமைப்பை பலப்படுத்த வேண்டும் என்றார்.

ஐடிஐ தமிழ் மன்றத்தின் ஆஞ்சநேயா கூறியது: தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது அவசியம் என்றார்.

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மோகன் கூறியது: எஸ்.டி.குமார் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்றார்.

நம்ம ஊர் தமிழ் மக்கள் இயக்கத்தின் ரவிகோவலன் பேசியது: கர்நாடகத்தில் தமிழ்ப்பள்ளிகளில் உள்ள பாடப்பிரிவுகள் அனைத்திலும் தமிழை கொண்டு வர வேண்டும். தமிழ் கூட்டுறவு சங்கம் தொடங்கி உள்ளோம். தமிழர் ஒற்றுமைக்காக தொடங்கப்படும் அமைப்பு பலமாக இருக்க வேண்டும். இந்த அமைப்பு பள்ளியை தொடங்கி, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் கற்றுத் தர வேண்டும். தமிழர்களுக்கான ஒரு நாள் இருக்க வேண்டும்.

பெமல் தமிழ் மன்றத்தைச் சேர்ந்த பாலசுப்ரமண்யம் பேசியது: அரசியலில் தமிழர்களுக்கு முக்கித்துவம் தர வேண்டும். முக்கியத்துவம் பெற வேண்டும். தமிழ் அமைப்புகளை ஒற்றிணைக்க வேண்டும். பெரிய தமிழ் அமைப்பின் கீழ் அனைவரும் இயங்க வேண்டும் என்றார்.

வி.சேகர் கூறியது: தமிழர்களுக்கென்றே தனியாக கூட்டுறவு வங்கித் தேவை என்றார்.

திருநாவுக்கரசு கூறியது: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. எனவே இங்கு கூறப்படும் ஆலோசனைகளை கேட்டு, தமிழர்கள் ஒன்றுபட ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். தமிழ்ப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கர்நாடகத்தில் தமிழ் வாரியம் தொடங்க வேண்டும்.

ஆதர்ஷா ஆட்டோ சங்கப் பொதுச் செயலாளர் சேர்ந்த சம்பத் பேசியது:தமிழர்கள் பயன்பெற தேவையான நடவடிக்கை மேற்கொள்வேன். தொடங்கப்படும் அமைப்பிற்கு துணையாக இருப்பேன் என்றார்.

தமிழ் குடும்பங்களின் கூட்டமைப்பின் செந்தில், ஈழமக்களை போல அமைப்பு தொடங்கப்பட்டு சிறப்பாக நடத்த வேண்டும் பின்னர் தமிழர்களின் மேன்மைக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றார்.

கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த கோபி ஏகாம்பரம் பேசியது: கர்நாடக தமிழர்களின் பாதுகாப்பிற்காக அமைப்பு தொடங்க வேண்டும். உண்மையாக தமிழர்களின் பாதுகாப்பிற்கு எஸ்.டி.குமார் சிறந்த அமைப்பு தொடங்க வேண்டும் என்றார்.

கால்பந்தாட்ட பயிற்சியாளர் குணசேகர் கூறியது, விளையாட்டு மூலம் தமிழர்களை ஒன்றுபடுத்த வேண்டும். கல்வி, கலை விளையாட்டின் மூலம் தமிழர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றார்.

காடுகோடி தமிழர் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு பேசியது: நமக்கு என்று ஒரு அமைப்பு இருப்பது அவசியம் என்றார்.

இறுதியில் பேசிய எஸ்.டி.குமார், அனைவரின் கருத்துகளை கேட்டுள்ளோம். அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு, இன்னும் ஒரு சில நாளில் முக்கிய பிரமுகர்களை அழைத்து, அவர்களின் ஆலோசனை பேரில் தமிழர்கள் ஒற்றுமைகான அமைப்பு அமைப்பதற்காக ஒத்தக் கருத்துள்ள முடிவு எடுக்கப்படும். அரசியலில் இருந்து ஒதுங்கி உள்ள நான், எனது இறுதி காலம் வரை தமிழர்களை ஒன்றிணைத்து, அவர்கள் கல்வி, பொருளாதாரம், அரசின் அதிகாரப்பதவிகளில் அமர்த்த வேண்டும் என்பதனை எனது குறிக்கோளாக உறுதி பூண்டுள்ளேன்.

எனவே மாநில அளவில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஜாதி, மதம் கடந்து விரைவில் தொடங்கப்பட உள்ள‌ அமைப்பில் சேர முன்வர வேண்டும். விரைவில் பெங்களூரு அரண்மனை திடலில் 5 லட்சம் தமிழர்களை ஒன்று திரட்டி, நமது பலத்தை ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு காண்பிப்போம் என்றார்.

நிகழ்ச்சியில் ஐடிஐ தமிழ் மன்றத்தின் ஆர்.பாஸ்கர், பைப்பனஹள்ளி ரமேஷ், தனஞ்செயன், செந்தில்குமார், சம்பத், வா.ஸ்ரீதரன், கோபிநாத், முத்துமணி நன்னன், ராஜேந்திரன், ராஜசேகரன், கி.சு.இளங்கோவன், ஜி.ராமசந்திரன், ராஜகுரு, சு.பாரி, ராஜா, வி.சேகர் கோமதி சேகர், கர்நாடகவின் சிங்கப்பெண்கள் அமைப்பின் பிரேமா, கீதா, சுதா, இரா.சுந்தரமூர்த்தி, ஹரிசுதன், குணசீலன், சி.ராசன், அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முந்தைய கட்டுரைபெங்களூரு எலஹங்காவில் 250 படுக்கை வசதி கொண்ட ஸ்பர்ஷ் மருத்துவமனை தொடக்கம்
அடுத்த கட்டுரைகாம்பஸ் குரூப் இந்தியா தனது மிகப்பெரிய அதிநவீன மத்திய சமையலறை பெங்களூரில் அறிமுகம்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்