முகப்பு Special Story நல்வழியில் நாட்டம் கொண்ட, நன்மக்களோடு, என்னையும் இணைத்துக் கொண்டு இறைமகனை வணங்குகிறேன்: முனைவர் எஸ்.டி.குமார்

நல்வழியில் நாட்டம் கொண்ட, நன்மக்களோடு, என்னையும் இணைத்துக் கொண்டு இறைமகனை வணங்குகிறேன்: முனைவர் எஸ்.டி.குமார்

0

பெங்களூரு, ஏப். 7: புனித வெள்ளியில் நன்மகனின் நல்வழியில் நாட்டம் கொண்ட, நன்மக்களோடு, என்னையும் இணைத்துக் கொண்டு இறைமகனை வணங்குகிறேன் என்று கர்நாடக மாநில அஇஅதிமுக செயலாளர் முனைவர் எஸ்.டி.குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: முப்பது வெள்ளிக்காசுக்கு, முத்தமிட்டு காட்டி கொடுத்த யூதாஸால், மனித குல இறைமகன் நீதியின் முன்பு நின்றபோது, இவரிடம் எந்த தவறும் காணமுடியவில்லை என்று, நீதிபதி தீர்ப்பு கூறினாலும், இவரை கொல்லுங்கள், கொல்லுங்கள். என்ற பாவிகள் குரலுக்கும், அதிகார வர்க்கத்துக்கும் அடிபணிந்த நீதிபதி, “இவரது இரத்த பழியில் எனக்கு பங்கில்லை” என்று தனது கைகளை கழுவினார்.

மூர்க்கர்கள் இயேசுவிற்கு முள்முடி சூட்டி, சிலுவையை சுமக்க வைத்து கல்வாரி மலைக்கு கொண்டு சென்றனர், அப்பொழுது அழுது புரண்ட அப்பாவிகளை பார்த்து, ” எனக்காக நீங்கள் அழ வேண்டாம், உங்களுக்காகவும், உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்” என்றார் இறைமகன்.
இரண்டு கள்வர்கள் மத்தியில் சிலுவையில் அறையப்பட்ட இறைமகன் இயேசு, “என் இறைவா, என் இறைவா, என்னை ஏன் கைவிட்டீர் என்று தன் தந்தையிடம் இறுதியாக கூறி பரிசுத்த ஆவியானார்.

இந்நாளை இறைமகன் நினைவேந்தலாக உலக மக்கள் புனித வெள்ளி (Good Friday) யாக, கடைபிடித்து வருகின்றனர். நன்மகனின், நல்வழியில் நாட்டம் கொண்ட, நன்மக்களோடு, என்னையும் இணைத்துக் கொண்டு இறைமகனை வணங்குகிறேன் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய கட்டுரைபுலிகேசிநகர் தொகுதியில் சிறப்பான வளர்ச்சி பணிகள் மேற்கொண்டுள்ளதால், எனக்கு இத்தொகுதி மக்களிடம் ஆதரவு பெருகி உள்ளது: காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்டசீனிவாஸ்மூர்த்தி
அடுத்த கட்டுரைராயாலோக் (Royaloak) சில்லறை விற்பனையை விரிவுபடுத்துகிறது. இந்தியாவில் அதன் 147வது கடை பெங்களூரு மாகடிசாலையில் திறப்பு

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்