முகப்பு Bengaluru தமிழாசிரியர், தமிழ் பத்திரிகையாளர் சங்கங்களின் சார்பில் பொங்கல் விழா

தமிழாசிரியர், தமிழ் பத்திரிகையாளர் சங்கங்களின் சார்பில் பொங்கல் விழா

0

பெங்களூரு, பிப்.12: கர்நாடகத் தமிழ்ப்பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர், கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கங்களின் சார்பில் பெங்களூரில் சனிக்கிழமை பொங்கல் விழா நடைப்பெற்ற‌து.

கர்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர், கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கங்களின் சார்பில் பெங்களூரு, குயின்ஸ் சாலையில் உள்ள வேளாண் தொழில்நுட்பர் மைய வளாகத்தில் சனிக்கிழமை பொங்கல் விழா நடைபெற்ற‌து. கர்நாடகத்தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் அ.தனஞ்செயன் தலைமையில் நடந்த விழாவில் புலவர் மா.கார்த்தியாயினி அனைவரையும் வரவேற்றார். எஸ்.வி.சி.கே. உயர்நிலைப்பள்ளி, அன்னம்மாதேவி உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்ற ஊமை நாடகம், பரதநாட்டியம், நாட்டிய நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற‌ன.

முன்னதாக, விழாவை பள்ளிக்கல்வித்துறை முன்னாள் இயக்குநர் சம்பங்கி குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தார். பின்னர், திருவள்ளுவர் சங்கத்தலைவர் பாவலர் கி.சு.இளங்கோவன், மங்களூரு தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் செந்தில், தமிழக முன்னாள் எம்.எல்.ஏ. பாவலர் கொ.வீ.நன்னன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பணி ஓய்வுபெற்ற தமிழாசிரியர்கள் சீதாலட்சுமிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


விழாவில் சம்பங்கி பேசுகையில்,”தமிழ் மிகவும் தொன்மையான மொழி. அந்தமொழியில் காணக்கிடைக்காத அறிவு வளம் இல்லை. தாய்மொழி தமிழை அனைவரும் கற்க வேண்டும். மொழி சார்ந்த விழுமியங்களில் சமரசம் கூடாது. தமிழ் ஆசிரியர்களின் தமிழ்ப்பணி பாராட்டத்தக்கது. கர்நாடகத்தில் தமிழ் தழைத்திருக்க மேலும் பல பணிகளை ஆற்ற தமிழாசிரியர்கள் முன்வரவேண்டும்” என்றார்.

விழாவில் மங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் மாணிக்கம், கர்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கப்பொருளாளர் இரா.பிரபாகரன், கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கச்செயலாளர் ஆ.வி.மதியழகன், துணைத்தலைவர் ஏ.செந்தில்நாதன், கல்வித்துறை அதிகாரி மெர்லின், பொன்.க.சுப்பிரமணியன், கலாவதி, பீனா, சுசீதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இறுதியில், கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கப் பொருளாளர் க.தினகரவேலு நன்றி கூறினார்.

முந்தைய கட்டுரைதூங்குபவர்களை எழுப்பி எச்சரிக்கை அடையச் செய்வது பத்திரிகைகள்தான்: ராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ்
அடுத்த கட்டுரைஆந்திரப் பிரதேசம் உள்நாட்டு மற்றும் உலகளாவிய முதலீட்டை ஒரு டஜன் துறைகளில் ஈர்க்கிறது, விரைவில் இந்தியாவின் ஏற்றுமதியில் 10% பங்கை இலக்காகக் கொண்டுள்ளது

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்