முகப்பு State க்ருஹ லட்சுமி திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் சித்தராமையா

க்ருஹ லட்சுமி திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் சித்தராமையா

இத்திட்டம் பெண்களை நிதி ரீதியாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

0

பெங்களூரு, ஜூலை 19: க்ருஹ லட்சுமி திட்டத்தை புதன்கிழமை முதல்வர் சித்தராமையா தொடக்கி வைத்தார்.

கர்நாடகத்தில் அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றகாங்கிரஸ் கட்சி, தேர்தல் வாக்குறுதியாக 5 முக்கிய உத்தரவாதங்களை அளித்தது. அந்த 5 முக்கிய உத்தரவாதங்களில் ஒன்றான க்ருஹலக்ஷ்மி திட்டத்திற்கான பதிவு செயல் முறையை முதல்வர் சித்தராமையா தொடக்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியது: பாஜக‌ கருத்தியல் ரீதியாக பெண்களுக்கு எதிரானது மற்றும் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரானது. இந்த வகுப்பினரின் பொருளாதார வலுவூட்டலுக்கு பாஜக எதிரானது. நாடு முழுவதும் க்ருஹக்ஷ்மி திட்டத்தை செயல்படுத்திய ஒரே மாநிலம் கர்நாடகம். ஆனால் பாஜகவினர் மக்களை திசை திருப்புகின்றனர்.

அன்னபாக்யா திட்டம் பிரதமர் மோடிக்கு சொந்தமானது என்று பாஜகவினர் கூறுகின்றனர். ஆனால் பாஜக ஆட்சியில் உள்ள உத்தரபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் அந்த திட்டத்தை ஏன் அமல்படுத்தப்படவில்லை?. ஒரு சில மாநிலங்களில் இலவச அரிசி திட்டம் ஏன் இல்லை.

க்ருஹ லட்சுமி திட்டத்திற்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளோம். நாட்டிலேயே இந்த திட்டத்திற்காக 35 ஆயிரம் கோடி ஒதுக்கிய மாநிலம் கர்நாடகம்தான். க்ருஹக்ஷ்மி திட்டத்தினால் 1 கோடியே 28 லட்சம் குடும்பங்கள் பயனடைகின்றன‌. இதை பொறுக்க முடியாத பாஜக, அம்மா, அண்ணி, மாமியார் என்று ஏதேதோ கிண்டல் செய்து வருகின்றனர். அவருக்கு மனிதாபிமானம் இல்லை என்றார்.

நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ ரிஸ்வான் ஹர்ஷத் தலைமை வகித்தார், துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் மற்றும் அமைச்சர்கள் ராமலிங்கரெட்டி, கே.எச்.முனியப்பா, டாக்டர். எச்.சி. மகாதேவப்பா, ரஹீம்கான், பைரதி சுரேஷ், முதல்வரின் அரசியல்துறை செயலாளர் நசீர்அகமது உட்பட சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

க்ருஹ லட்சுமி திட்டத்தின் மூலம் 1.28 கோடி குடும்பங்கள் பயன்பெறும். அங்கனவாடி பணியாளர்கள், ஊராட்சி வளர்ச்சி அலுவலர், தாசில்தார், மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை செயல் அலுவலர்கள் சேவை தங்குதடையின்றி செய்ய பயன்படுத்தப்படுவார்கள்.

வீட்டின் குடும்பத் தலைவியின் விண்ணப்பங்களை பெங்களூருஒன், கர்நாடகாஒன், கிராமஒன், ஏஎம்டி பாபுஜி சேவா கேந்திரா மூலம் விண்ணப்பிக்கலாம். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, ஏழைகளுக்கு எந்தவித இடையூறும் இன்றி கடன் கிடைப்பதை உறுதி செய்வதற்காக வங்கிச் சேவைகளை தேசிய மயமாக்கிய நாள் இன்று என்பது தற்செயலானது என்று அமைச்சர் ஹெப்பால்கர் தெரிவித்தார்.

முந்தைய கட்டுரைவெடிகுண்டு, ஆயுதங்களுடன் 5 பேர் கைது
அடுத்த கட்டுரைதென் பெங்களூரில் பிவிஆர் ஐநாக்ஸின் முதல் ஐஸ் தியேட்டர் திறப்பு

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்