முகப்பு Special Story கர்நாடக வாழ் தமிழர்களை ஒற்றுமைபடுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம்

கர்நாடக வாழ் தமிழர்களை ஒற்றுமைபடுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம்

0

பெங்களூரு, மே 11: கர்நாடக வாழ் தமிழர்களை ஒற்றுமைபடுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் பெங்களூரு அல்சூரு ஏரிக்கரையில் உள்ள யாதவா சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 12) காலை 10 மணியளவில் தொடங்கி நடைபெற உள்ளது.

இது குறித்து தமிழ் ஆர்வலர் முனைவர் எஸ்.டி.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழர்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும், வசிக்கட்டும். அவர்கள் எப்படியாவது தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளட்டும். எந்த அமைப்பிலாவது இருக்கட்டும். அனைவரும் ஒன்றாக வாருங்கள். தமிழராக ஒன்று கூடுவோம். சிங்கப்பூர், மலேசியாவில் வாழும் தமிழர்களைப் போல இந்த மண் சார்ந்து வாழ்ந்து, மாநிலத்தை வளமாக்குவோம். கட்சி, ஜாதி, மத வேறுபாடு இன்றி தமிழர்கள் என்ற உணர்வுடன் ஒரே குடையின் கீழ் ஒன்று கூடுவோம். நம்மை நாமறிவோம்.

தமிழர்களின் கர்நாடக எதிர்கால வாழ்வியலை வளமாக்குவோம். கன்னடர், தமிழர் ஒற்றுமையை பலமாக்குவோம். தமிழர்களிடையே புதிய எழுச்சியை உருவாக்குவோம். கட்சி,சாதி, மதம், தமிழ் அமைப்புகள் குறித்து, உயர்த்தி, தாழ்த்திபேசுவதை தவிர்த்து, எந்த வகையில் கர்நாடக அமைப்புகளையும். தமிழர்கள் ஒற்றுமைக்கு வழி காணலாம் என்பது குறித்து, தனிநபர், அமைப்புகள் மீதான தாக்குதலை தவிர்த்து, உயர்ந்த கருத்துக்களை மட்டும் தங்கள் மேலான ஆலோசனைகளாக, வழங்கிட வாருங்கள்.

தமிழர்களுக்கான பொது அறிவிப்பு அழைப்பாக இதனை ஏற்று, திரளாக வாருங்கள் என்று இரு கரம் கூப்பி இன்முகத்துடன் வரவேற்கிறேன். தமிழர்களின் ஒற்றுமைக்கு ஆர்வம் உள்ள அனைவரும் தாங்களவே முன் வந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். தமிழர்களின் வளர்ச்சி மட்டுமின்றி நாம் வாழும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் தேவையான ஆலோசனை வழங்க அனைவரும் ஒன்று திரண்டு, திரளாக ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழ் ஆர்வலர் முனைவர் எஸ்.டி.குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

முந்தைய கட்டுரைபெங்களூரில் இந்தியாவின் மிகப்பெரிய சொகுசு வெள்ளி நகை பிராண்டான கோயாஸை நடிகை ஆஷிகா ரங்கநாத் திறந்து வைத்தார்
அடுத்த கட்டுரைடாடா டீ கோல்ட் கேர், பெங்களூரு நெக்ஸஸ் கோரமங்களாவில் அர்த்தமுள்ள தனிப்பட்ட அனுபவங்களுடன் அன்னையர் தினத்தைக் கொண்டாடுகிறது

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்