முகப்பு Awards கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமிக்கு பேராசிரியர் விருது

கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமிக்கு பேராசிரியர் விருது

0

பெங்களூரு, செப். 2: கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமிக்கு பேராசியர் விருது வழங்கப்பட உள்ளது. வேலூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் செப். 17 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விருதை அவருக்கு வழங்கி கௌரவிக்க உள்ளார்.

இது குறித்து ந.இராமசாமி செய்தியாளர்களிடம் கூறியது: ஆண்டும் தோறும் நடைபெரும் முப்பெரும் விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படுகிறது. அதன்படி நிகழாண்டு வேலுரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பேராசிரியர் விருதுக்கு என்னை தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும், கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

1948ம் ஆண்டில் பள்ளி மாணவ பருவத்தில் கழக இயக்கத்தில் ஈடுபட்டு சக நண்பர்களுடன் இணைந்து கழக பணிக்காக பகுத்தறிவு மன்றம், திராவிட இன எழுச்சி மன்றங்களை துவக்கி அதன் செயலாளராக பொறுப்பேற்று கழக வார ஏடுகளை தருவித்து பொதுமக்கள் படிக்கும் வகையில் படிப்பகம் நடத்தி வந்தோம். 1951ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தி.மு.க முதல் மாநில மாநாட்டில் கலந்துக்கொண்டு நானும் மற்ற நண்பர்களும் அவ்வாண்டே தலைமை கழகத்தில் தலைக்கு எட்டணா செலுத்தி கழக உறுப்பினராக பதிவு செய்து கொண்டோம்.

பின்பு கிளை கழகத்தின் மாவட்ட பிரதிநிதியாக தேர்வாகி 1956, 1958 ஆண்டுகளில் பெங்களூரில் நடைபெற்ற இரண்டு மாவட்ட தி.மு.க மாநாடுகளிலும் வேலூரில் நடைபெற்ற வடஆற்காடு, ஆந்திரா, கருநாடகம் ஆகிய மாநாட்டில் வரவேற்புக்குழு உறுப்பினராக பணியாற்றி உள்ளேன். 1965ம் ஆண்டில் மாநில தி.மு.கழகத்தின் துணை அமைப்பாளராக தேர்வு ஆனபின் கருநாடக மாநிலத்தில் கழக அமைப்புகளை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டு மைசூரு, பத்திராவதி, சிவமோக, தாவனகரே, மங்களுர், நஞ்சன்கூடு ஆகிய நகரங்களில் கிளைகழகங்களை உருவாக்கி மாநில கழகத்திற்க்கு வலுசேர்த்துள்ளேன்.

நான் பெங்களுரில் கழக பிரச்சார பணி வலுபடுத்த பெரியார், அண்ணா, நாவலர், பேராசிரியர், கே.எ.மதியழகன், ஈ.வி.கே. சம்பத், என்.வி.நடராசன், ப.உ.சண்முகம், சி.பி.சிட்டரசு, எ.வி.பி ஆசைதம்பி, எம்.எல்.ஏ கோனிந்தசாமி, கண்ணதாசன், சத்தியவாணிமுத்து, டி.கே.சீனுவாசன், நாஞ்சில் மனோகரன், மதுரை முத்து, அலுமேலு அப்பாதுரை, எ.கே.வேலன் உள்ளிட்டோரை அழைத்து பொது கூட்டங்கள் நடத்தி கழக பிரச்சாரத்தை தீவிரபடுத்தியுள்ளேன்.

1965ம் ஆண்டில் பெங்களூரில் இந்தி திணிப்பை கண்டித்து கருப்புகொடி போராட்டத்தில் கலந்துக்கொண்டு கைதாகி 2 நாள் காவலில் அடைக்கப்பட்டேன். ஈழதமிழர்களுக்காக ரயில் மரியல் போராட்டம் தபால் நிலைய அலுவலகம் முன் ஆர்பாட்டம் உண்ணா விரதபோராட்டம் உள்ளிட்ட‌ பல்வேறு போராட்டங்களில் கலந்துக்கொண்டு கைதாகியுள்ளேன்.

சென்னையில் நடைபெற்ற நேருவுக்கு கருப்புகொடி காட்டும் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளேன். கலைஞர் அவர்களை 2முறை எம்.ஜி.ஆர் ஆட்சியில் கைது செய்ததை கண்டித்து பெங்களூரிலிருந்து ஒசூருக்கு நடைப்பயணபோராட்டத்தில் கலந்துக்கொண்டு ஒசூர் தாசில்தாரிடம் எம்.ஜி.ஆரை கண்டித்து தீர்மானத்தை கொடுத்தோம்.

பெல்காம் மாவட்டம் கருநாடகத்திற்கே சொந்தம் என்ற மகாஜன் கமிட்டி அறிக்கையை அமுல் படுத்த வலியுறுத்தி 1966ம் ஆண்டில் அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களுக்கு கருப்பு கொடி காட்டிய போராட்டத்திலும் அம்மையார் இந்திராகாந்திக்கு கருப்புகொடி காட்டிய போராட்டத்திலும் கலந்துக்கொண்டு கைதாகியுள்ளேன்.

கருநாடக மாநிலத்தில் பெங்களுர் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் என்பதாலும் இதில் பணியாற்றும் கழக தொழிலாளர்களுக்கென தொழிற்சங்கத்தை அமைக்கும் முடிவில் ஈடுபட்டு 1958ம் ஆண்டில் பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தையும், பொது தொழிலாளர் சங்கத்தையும் துவக்கி கழக தொழிற்சங்கங்கள் மூலம் தொழிலாளர் போராட்டங்கள் நடத்தி சிறைபட்ட பணியாற்றி 1980ம் ஆண்டு கருநாடக மாநிலத்தில் தி.மு.க தொழிற்சங்க பேரவையை நிறுவி செயல்படுத்தி வருகிறேன்.

கருநாடக மாநிலத்தில் கன்னட மொழி பேசும் மக்கள் இடையே கன்னட மொழியில் கழக பிரச்சாரங்கள் மேற்கொள்ள பெங்களுரு, ஜம்கண்டி, சிந்தாமணி, ஆனேக்கல் போன்ற பகுதிகளில் கன்னடம் மொழியில் சிறப்புரையாற்றும் கழக இளைஞர்களை உறுவாக்கி பணியாற்றி வருகிறேன் அவர்களைகொண்டு கழக கூட்டங்களில் கன்னட மொழியில் பேசும் இளைஞர்களுக்கு முன்னுரிமை தந்து கழக செயல்படுத்துகிறேன்.

கழகத்தின் துணை அமைப்புகளான இளைஞர் அணி, இலக்கிய அணி, மகளிர் அணி, பணி தொ.மு.ச பேரவை, போன்ற அமைப்புகளை உருவாக்கி கழக பிரச்சாரங்களை வலுபடுத்தி செயல்பட்டு வருகிறேன். கருநாடக மாநிலத்தில் பெங்களூரில் கழக பிரச்சார பணிகள் கூட்டங்கள் தோய்வின்றி நடைபெற மாநில தி.மு.க கலைஞரகம் வளாகத்தில் தனியாக தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தை கட்டி அதில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், அய்யன் திருவள்ளுவர் திருவுறுவ சிலைகளை அமைத்து அரங்கத்தில் நூற்றுக்கனக்கான கழக நிகழ்ச்சிகளையும் பிரச்சார பணிகளையும் தோய்வின்றி தொடர்ந்து நடைமுறைபடுத்தி வருகின்றோம்.

தமிழகத்தில் மழைவெள்ளம் பாதிப்பு ஏற்பட்டபோது மாநில தி.மு.க சார்பில் தலைவர் கலைஞரிடம் 1லட்சம் ரூபாய் நீதியும் 3லட்சம் ரூபாய் பெறுமானம் நிவாரண பொருட்களும் வழங்கியும் அதேபோல் கருநாடக மாநில வெள்ள நிவாரணத்திற்க்கு மாநில தி.மு.க சார்பில் நிதியுதவியும் லட்ச ரூபாய் பெறுமானமுள்ள நல உதவிகளை மாநில அரசின் அப்போதிருந்த பாஜகவைச் சேர்ந்த அமைச்சரை அழைத்து நேரடியாக வழங்கியபோது அதைபெற்றுக்கொண்டு அமைச்சர் தி.மு.க மனிதநேயமிக்க கட்சி என்று பாராட்டியது வரலாறு உள்ளது.

மாநில கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் கழக முன்னோடிகளுக்கு பெரியர் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, தளபதியார் விருது, பேராசிரியர் விருது, முரசொலிமாறன் விருது, உதயநிதி ஸ்டாலின் விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி கழக தோழர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம் எனது கழக பணி 1950ல் இருந்து இன்றுவரை தோய்வின்றி மாநில கழக நிர்வாகத்தில் செயல்பட்டு வருவது எனக்கு பெறுமையாகவும் குற்றாத ஊக்காமவும் உள்ளது என்றார்.

முந்தைய கட்டுரைஎடிடீட் எக்ஸ்போ 2023: பிரகாசமான எதிர்காலத்திற்காக பெற்றோருக்கும் கல்விக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்தல்
அடுத்த கட்டுரைபெங்களூரு சர்ஜாபூர் சாலையில் ஹிட்ச்கி திறப்பு: பாலிவுட் கவர்ச்சி மற்றும் தொழில்நுட்ப ஸ்வாக் ஒரு மயக்கும் அனுபவம்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்