முகப்பு Politics இந்தியாவில் ஜனநாயகத்தை காப்பாற்ற முயலும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்: ந.இராமசாமி

இந்தியாவில் ஜனநாயகத்தை காப்பாற்ற முயலும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்: ந.இராமசாமி

0

பெங்களூரு, மார்ச் 2: இந்தியாவில் ஜனநாயகத்தை காப்பாற்ற முயலும் ஒரே தலைவர் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் என்று கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தெரிவித்தார்.


பெங்களூரு ராமசந்திரபுரத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மு.க.ஸ்டாலினின் 71 வது பிறந்த நாள் ந.இராமசாமியின் தலைமையில் கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி அக்கட்சியின் உள்ள அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. பின்னர் மகளிரணி அமைப்பாளர் சற்குணம் இளமதி தலைமையில், ஸ்ரீராமபுரத்தில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் உள்ள தாய்மார்கள், குழந்தைகளுக்கு பால், பழம், ரொட்டி, பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

பின்னர் பேசிய ந.இராமசாமி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் முதல்வர்களில் ஜனநாயகத்தை காப்பாற்ற முயலும் ஒரே தலைவர் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். மத்தியில் ஆளும் பாஜகவினால் நாட்டின் ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே ஜனநாயகத்தை பாதுகாக்கும் நம்பிக்கை தலைவராக மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். அவர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து, தமிழ்நாட்டையும், இந்திய மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் சுந்தரேசன், ஆனந்தராஜ், வி.எஸ்.மணி, போர்முரசு கதிரவன், லோகநாதன், முருகு தர்மலிங்கம், பழம்நீ, காஞ்சி சிவசங்கர், பன்னீர்செல்வம், உத்தரகுமார், ராஜசேகர், முருகானந்தம், லியோராஜன், கரிகாலன், கிரிநகர் பரசுராம், ஏழுமலை, குமார், ஆர்.எம்.செல்வம், தனுஷ், அஜித், விஜய், முருகமணி, சுசிலா, மங்கம்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முந்தைய கட்டுரைஷிக்ஷாலோகம் இந்தியாவில் கல்வி இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான கூட்டு நடவடிக்கையை ஊக்குவிக்க இன்ஹோக்டு 3.0 ஐ வழங்குகிறது
அடுத்த கட்டுரைமுன்னாள் மாணவர்களை கௌரவித்த‌ பிஐடிஎம்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்