முகப்பு Politics அழிக்க முடியாத ஜனநாயக சக்தியை படைத்தவர் பேரறிஞர் அண்ணா: ந.இராமசாமி

அழிக்க முடியாத ஜனநாயக சக்தியை படைத்தவர் பேரறிஞர் அண்ணா: ந.இராமசாமி

0

பெங்களூரு, பிப். 3: அழிக்க முடியாத ஜனநாயக சக்தியை படைத்தவர் பேரறிஞர் அண்ணா என்று கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தெரிவித்தார்.

பெங்களூரு ஸ்ரீராமபுரம் ராமச்சந்திரபுரத்தில் உள்ள கர்நாடக மாநில திமுக தலைமை அலுவலகமான கலைஞரகம், தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் சனிக்கிழமை (பிப்.3) பேரறிஞர் அண்ணா நினைவு தினம் மாநில திமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்வில் அண்ணாவின் உருவச் சிலை மாலை அணிவித்து, மரியாதை செய்தனர்.

இதில் கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி, அவைத் தலைவர் மொ.பெரியசாமி, பொருளாளர் தட்சிணாமூர்த்தி, நிர்வாகிகள் வி.எஸ்.மணி, ஏ.டி.ஆனந்தராஜ், கே.ஏ.சுந்தரேசன், இராமலிங்கம், எம்.ஆர்.பழம்நீ, சி.ஜெயபால், லோகநாதன், பன்னீர்செல்வம், கோ.கருணாநிதி பி&டி, த.கேசவன், லோகநாதன், ஜி.நாகராஜ், கரிகாலன், சதீஷ், தனுஷ், உல்டண்ட்ஸ் கணேசன், சிவமலை, விக்ரம், தமிழ்ச் செல்வம், மகளிர் அணியைச் சேர்ந்த சற்குணம், மங்கம்மா, ராதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு ந.இராமசாமி அளித்த பேட்டி: அழிக்க முடியாத ஜனநாயக சக்தியை படைத்தவர் பேரறிஞர் அண்ணா. பாமர மக்களுக்கு அரசியலில் பங்குள்ளது என்பதனை நிலை நாட்டியவர் அண்ணா. தமிழ்நாட்டில் தமிழ் மக்களை எல்லாம் தமிழ் கொள்கையை பேச வைத்து, உலகம் முழுவதும் தமிழ் மொழியை பரப்பியவர் அண்ணா. இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு மாநில கட்சியை தொடங்கி, இந்திய நாட்டிற்கு வழிகாட்டியவர் அண்ணா, இந்தியாவிலேயே ஒரு மாநில கட்சியை ஆட்சியை பிடிக்க வழிகாட்டியவர். அவரது எழுத்தும் பேச்சும் இந்திய வரலாற்றில் மட்டுமின்றி, உலக வரலாற்றிலும் இடம்பெற்றது.

தமிழ்நாட்டில் தற்போது திராவிட மாடல் ஆட்சி செய்து வரும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் வழிகாட்டியவர் அறிஞர் அண்ணா. அவர் மாபெரும் சரித்திரம் படைத்தவர். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதனை உலகம் போற்றும் வகையில் நிலை நிறுத்தியவர் அறிஞர் அண்ணா. அவரின் புகழ் இன்றளவிலும் மக்களிடையே உள்ளதற்கு திமுகவும் ஒரு காரணம். அவரது நினைவு நாளில் அவரது புகழை பரப்பு, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவையும், அதன் கூட்டணி கட்சிகளை பெருமளவில் வெற்றி பெறச் செய்வோம் என்றார்.

முந்தைய கட்டுரைஎதிர்பார்த்தபடியே உள்ளது மத்திய அரசின் பட்ஜெட்: நிகுஞ் அகர்வால்
அடுத்த கட்டுரைபெங்களூரில் அஇஅதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் அனுசரிப்பு

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்