முகப்பு Bengaluru பேராசிரியர் அன்பழகன் இறுதி மூச்சி வரை கலைஞர் கருணாநிதியுடன் தோளோடு தோள் நின்று கட்சியின் வளர்ச்சிக்காக...

பேராசிரியர் அன்பழகன் இறுதி மூச்சி வரை கலைஞர் கருணாநிதியுடன் தோளோடு தோள் நின்று கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டார்: புதுக்கோட்டை விஜயா பேச்சு

0

பெங்களூரு, டிச. 18: பேராசிரியர் அன்பழகன் இறுதி மூச்சி வரை கலைஞர் கருணாநிதியுடன் தோளோடு தோள் நின்று கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டார். தந்தை பெரியாரின் கொள்கை வழியில் கடைசி வரை சுயமரியாதைகாரராக பேராசிரியர் அன்பழகன் வாழ்ந்து மறைந்தார் என்று திமுக தலைமை கழகப் பேச்சாளர் புதுக்கோட்டை விஜயா தெரிவித்தார்.

கர்நாடக மாநில திமுக சார்பில் பெங்களூரு ராமசந்திரபுரத்தில் உள்ள மாநில திமுக தலைமை கழக கட்டிடமான கலைஞரகத்தில் உள்ள மு.க.ஸ்டாலின் மணி விழா அரங்கில் மறைந்த இனமான பேராசிரியர் க.அன்பழகனின் 100 வது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் மாநில கழக பொருளாளர் கே.தட்சணா மூர்த்தி கழக கொடி ஏற்றி வைத்தார். எம்.ஆர்.பழம்நீ தமிழ் வாழ்த்து பாடினார். மாநில அவைத்தலைவர் மொ.பெரியசாமி வரவேற்புரை ஆற்றினார். மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் நிர்வாகிகள் ஏ.டி.ஆனந்தராஜ், வி.எஸ்.மணி, மாநில இளைஞரணி செயலாளர் டி.சிவமலை, மா நி ல இலக்கிய அணி செயலாளர் போர்முரசு கதிரவன், ஆற்காடு அன்பழகன், மகளிரணி அமைப்பாளர் சற்குண இளமதி, நிர்வாகிகள் அம்மாயி ஜெயவேல், பி.காயத்திரி பிரபு, தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் திருமலை, சந்திரசேகர, பிரபு, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் என்.விக்ரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக தலைமை கழக பேச்சாளர் புதுக்கோட்டை விஜயா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது, திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஆலமரத்தின் நிழலில் கோடிக் காணக்கான‌ தமிழ் சமூகம் வாழ்ந்து வருகிறது. கடந்த 1949 ஆண்டு பேரறிஞர் அண்ணா, திமுகவைத் தொடங்கிய போது 40 வய‌து இளைஞராக
இருந்தாார். தமிழக முதல்வராக கலைஞர் கடந்த 1967 ஆம் ஆண்டு பதவி ஏற்றபோது 45 வயது இளைஞராக இருந்தார். அதன் காரணமாக இளைஞரணி தொடங்கவில்லை.

கடந்த 1980 ஆம் ஆண்டு மதுரை ஜான்சி ராணி பூங்காவில் மாநில இளைஞரணி தலைவராக‌ மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபோது அவருக்கு 24 வயது. அவர் மேற்கொண்ட கழக பணிதான், கழகத்திற்கு ஆணி வேறாக அமைந்ததுடன் கலைஞர் இருமுறையும் தற்போது அவரும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு கழகத்தை பலப்படுத்தியது.
தற்போதைய கழக தலைவரை செப்பனிட்டு வழி நடத்தியவர் பேராசிரியர் க.அன்பழகன். அவர் போல் ஒரு பொறுமையான, கொள்கை உறுதி கொண்ட தலைவரைப் பார்ப்பது அரிது.

பேராசிரியர் அன்பழகன், எப்போதும் தன்னை ஒரு மனிதன், சுயமரியாதைகாரன், பெரியாரின் தொண்டர், கலைஞரின் தோழன் என்று பெறுமையாக கூறுவார். கலைஞர் மற்றும் பேராசிரியர் இடையிலான உறவு சகோதர பாசத்துடன் கூடிய உறவு. கழகத்தையும், திராவிட இயக்க கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்த உறவு, ஆட்சி அதிகாரம் இருந்தபோது அதை செயல்படுத்திய உறவு. அந்த பெருமை மிகுந்த பேராசிரியர் தன் வாழ்நாள் முழுவதும் சுயமரியாதைக்காரராக வாழ்ந்தார். பேராசிரியர் அன்பழகன் இறுதி மூச்சி வரை கலைஞர் கருணாநிதியுடன் தோளோடு தோள் நின்று கட்சியின் வளர்ச்சிக்காக பாடுப்பட்டார் என்றார். இறுதியில் அக்கட்சியின் மாநில துணை அமைப்பாளர் ஜி.இராமலிங்கம் நன்றி கூறினார்.

முந்தைய கட்டுரைகிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சித்ரகலா பரிஷத்தில் கைவினைப்பொருட்கள் விற்பனையை நடிகை காருண்யா ராம் தொடக்கி வைத்தார்
அடுத்த கட்டுரைதொழில் வளம் என்ற பெயரில் லாரி உரிமையாளர்களை அரசு சுரண்டுகிறது: பி. சென்னாரெட்டி குற்றச்சாட்டு

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்