முகப்பு Politics பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் பெங்களூரு மத்திய தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்:...

பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் பெங்களூரு மத்திய தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்: பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ்

0

பெங்களூரு, ஏப். 16: பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் பெங்களூரு மத்திய தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அகில இந்திய அமைப்புச்சாரா தொழிலாளர் காங்கிரஸின் தென் மாநிலங்களில் ஒருங்கிணைபாளரும், திருவள்ளுவர் ஜெயந்தி தின விழாக் குழுத் தலைவருமான‌ பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தெரிவித்தார்.

பெங்களூரு சி.வி.ராமன்நகர் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள நியூ பைப்பனஹள்ளி பகுதியில் திங்கள்கிழமை ரமேஷ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பெங்களூர் மத்திய தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மன்சூர் அலிகானை வரவேற்றும், பின்னர் அவரை ஆதரித்தும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் முகமது நளபாட், ஆனந்த் குமார், விஸ்வநாதன், கிருஷ்ணன், ராஜசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய பையப்பன ஹள்ளி ரமேஷ், பெங்களூர் மத்திய தொகுதியில் கடந்த மூன்று முறை வெற்றி பெற்ற பாஜக உறுப்பினர் இந்த தொகுதியின் வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்லை இதனால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். எனவே காங்கிரஸ் வேட்பாளர் மன்சூர் அலிகானை இந்த தேர்தலில் வெற்றி பெறச் செய்ய மக்கள் முடிவு செய்துள்ளனர். மன்சூர் அலி கான் வெற்றி பெற்றால் அவர் இந்த தொகுதியின் வளர்ச்சிக்காக கடுமையாக பாடுபடுவார் என்பதனை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் பெங்களூரு மத்திய தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மன்சூர் அலிகானை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக இலவச திட்டங்களால் பெண்கள், ஏழைகள், நலிந்த மக்கள் பயனடைந்து வருகின்றனர். அதேபோல மத்தியிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தால், மக்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதனால் நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து, மக்கள் எந்த வித அச்சமும் இன்றி நிம்மதியாக வாழ்வார்கள் என்றார்.

முந்தைய கட்டுரைசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
அடுத்த கட்டுரைலுலு மால் பெங்களூரு, கர்நாடக தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறையுடன் இணைந்து தீ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்