முகப்பு Temple பெங்களூரு ஜெயநகர் ராயர் மடத்தில் திருவிழா மற்றும் நடன விழா

பெங்களூரு ஜெயநகர் ராயர் மடத்தில் திருவிழா மற்றும் நடன விழா

0

பெங்களூரு, மார்ச் 18: பெங்களூரு ஜெயநகர் ராயர் மடத்தில் திருவிழா மற்றும் நடன விழா சிறப்பாக நடைபெற்றது.

பெங்களூரு ஜெயநகர் ஐந்தாவது லேஅவுட்டில் உள்ள நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் மடத்தில், 1008 வது ஸ்ரீ சுபுதேந்திரதீர்த்த சுவாமிகளின் ஆசியுடன், ஸ்ரீ மடத்தின் மூத்த மேலாளர் ஆர்.கே. வடிேந்திராச்சார் தலைமையில், வியாழக்கிழமை காலை பஞ்சாமிர்த அபிஷேக கனகாபிஷேக அலங்காரம், அன்னதான சேவை, மகாமங்களாராதி நிகழ்ச்சிகளும், மாலை தேர்த்ஸவ, கஜவாஹனநோத்ஸவ, பழங்கி உற்சவம், தொட்டில் சேவைகளும், இன்றைய கலாசார நிகழ்ச்சியான “பரதநாட்டியம்” நிகழ்ச்சியும் நடைபெற்றன.

மேலும் கலாசார நிகழ்ச்சியில், நாட்டியேஸ்வரா நடனப்பள்ளி இயக்குனர் சதீஷ்பாபு அவர்களின் மாணவர்களின் “பரதநாட்டியம்” நிகழ்ச்சியை ஸ்ரீ மடத்தின் சுவாமிகள்நந்தகிஷோர் ஆச்சார் மிகவும் சிறப்பாக இருந்ததாக பாராட்டு தெரிவித்தார்.

இதனை முன்னிட்டு, நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமிகளை தரிசனம் செய்து, நிகழ்ச்சியில் பங்கேற்று, பிரசாதம், குருவின் அருள், ஆசியை பெற்றனர்.

முந்தைய கட்டுரைஇணையதளத்தில் விடுபட்ட எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் மாதிரி வினாத்தாளை இணைக்க தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்
அடுத்த கட்டுரைகர்நாடகாவில் உள்ள கிஸ்ணாவின் (KISNA) சில்லறை வணிகக் கூட்டாளர்களுக்கான கிளஸ்டர் கூட்டம்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்