முகப்பு Politics பெங்களூரில் மார்ச் 23 இல் கருநாடக மாநில திமுக இளைஞர் அணி சார்பில் தமிழ்நாடு முதல்வர்...

பெங்களூரில் மார்ச் 23 இல் கருநாடக மாநில திமுக இளைஞர் அணி சார்பில் தமிழ்நாடு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் 70-வது ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

0

பெங்களூரு, மார்ச் 17: கருநாடக மாநில திமுக இளைஞர் அணி சார்பில் அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான‌ தளபதி மு.க.ஸ்டாலின் 70-வது ஆண்டு பிறந்த நாள் விழா மார்ச் 23 ஆம் தேதி பெங்களூரில் கொண்டாடப்படுகிறது.

பெங்களூரு சேஷாத்ரிபுரம், கினோ திரையரங்கம் அருகில் உள்ள கருநாடக பார்வையற்றோர் காப்பகத்தில் மார்ச் 23‍ ஆம் தேதி, வியாழக்கிழமை பிற்பகல் 12 மணியளவில் கருநாடக மாநில திமுக இளைஞர் அணி சார்பில் அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான‌ தளபதி மு.க.ஸ்டாலினின் 70-வது ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. பிறந்த நாளையொட்டி காப்பகத்தில் உள்ள பார்வையற்ற பிள்ளைகளுக்கு பிற்பகல் அறுசுவை உணவும், நல உதவிகளும் வழங்கப்படும்.

நிகழ்ச்சியில் கருநாடக மாநில திமுக இளைஞரணி அமைப்பாளர் மு.இராஐசேகர் வரவேற்புரை நிகழ்த்துகிறார். கருநாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தலைமை வகிக்கிறார். மாநில திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.முருகானந்தம் வாழ்த்துரை வழங்குகிறார். முன்னிலை மாநில திமுக நிர்வாகிகள், முன்னாள் மாநில திமுக நிர்வாகிகள், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர்கள், திமுக மகளிர் அணி, தொமுச பேரவை நிர்வாகிகள், கிளைக்கழக நிர்வாகிகள் வகிப்பார்கள். நிகழ்ச்சியில் இறுதியில் மாநில திமுக துணை அமைப்பாளர் ஜி.இராமலிங்கம் நன்றியுரை ஆற்றுகிறார்.

முந்தைய கட்டுரைபுதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் பெயரைச்சூட்ட வேண்டும்: முன்னாள் எம்.பி. உதித்ராஜ்
அடுத்த கட்டுரைபெங்களூரில் ஐஐஜேஎஸ் திரிதியாவின் முதலாவது பதிப்பை தொடங்கி வைத்தார் கர்நாடக அமைச்சர் டாக்டர் முருகேஷ் ஆர்.நிராணி

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்