முகப்பு Health பெங்களூரில் நாளை இலவச சித்த மருத்துவ முகாம்

பெங்களூரில் நாளை இலவச சித்த மருத்துவ முகாம்

0

பெங்களூரு, ஜூன் 5: பெங்களூரில் வியாழக்கிழமை (ஜூன் 6) இலவச சித்த மருத்துவ முகாம் நடக்கவிருக்கிறது.

இது குறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பெங்களூரு சித்த மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின், மத்தியசித்த மருத்துவஆராய்ச்சிக் குழுமத்தின் கீழ் பெங்களூரில் இயங்கும் சித்த மருத்துவ ஆராய்ச்சி பிரிவின் எட்டாம் ஆண்டு நிறுவன நாளை(நிறுவன நாள்: 25-05-2017) முன்னிட்டு, கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்துடன் இணைந்து இலவச சித்த மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பெங்களூரு, சிவாஜிநகர், குயின்ஸ் சாலையில் தினச்சுடர் அலுவலகத்தின் அருகேயுள்ள கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில் ஜூன் 6ஆம் தேதி(வியாழக்கிழமை) காலை 10.30 மணி முதல் நண்பகல் 2.00 மணி வரை சித்த மருத்துவமுகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் நீரிழிவு, ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட பல நோய்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனையுடன் இலவசமாக சித்தமருந்தும் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தமிழரின் மருத்துவமுறையாம் சித்த மருத்துவத்தின் பலனை பெறுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. 

முந்தைய கட்டுரைநீட் யுஜி 2024ல் அதிக மதிப்பெண் பெற்ற பெங்களூரைச் சேர்ந்த ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்டின் (ஏஇஎஸ்எல்) 21 மாணவர்கள்
அடுத்த கட்டுரைவாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்: இ கென்னா மார்ஜின் வர்த்தகம் இன்று தொடக்கம்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்