முகப்பு Bengaluru பெங்களூரில் திருவள்ளுவர் ஜெயந்தி பைப்பனஹள்ளி டி.ரமேஷ் தலைமையில் கோலாகலமாக‌ கொண்டாட்டம்

பெங்களூரில் திருவள்ளுவர் ஜெயந்தி பைப்பனஹள்ளி டி.ரமேஷ் தலைமையில் கோலாகலமாக‌ கொண்டாட்டம்

0

பெங்களூரு, ஜன. 15: பெங்களூரில் திருவள்ளுவர் ஜெயந்தி பைப்பனஹள்ளி டி.ரமேஷ் தலைமையில் கோலாகலமாக‌ கொண்டாட்டம் சித்தராமையா, முன்னாள் மைச்சர் கே.ஜார்ஜ், எம்.எல்.ஏக்கள் ரிஸ்வான் அர்ஷத், ஹாரீஷ், அகண்ட சீனிவாஸ்மூர்த்தி, ஜமீர் அகமது, ரகு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெங்களூரில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் தென் இந்திய ஒருங்கிணைப்பாளரும், தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஜெயந்தி விழா குழுத் தலைவருமான‌ பைப்பனஹள்ளி டி.ரமேஷ் தலைமையில் திருவள்ளுவர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பெங்களூரு அல்சூர் ஏரி கரையில் அமைந்துள்ள‌ திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த‌ முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான‌ சித்தராமையா,

முன்னாள் அமைச்சர்கள்,கே.ஜே ஜார்ஜ், ஜமீர் அகமதுகான், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ரிஸ்வான் அர்ஷ‌த், ஹாரிஷ், அகண்ட சீனிவாசமூர்த்தி, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ரகு, முன்னாள் மேயர் சம்பத்ராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் கோபிசந்தர், ஆனந்தகுமார், திமுக மாநில அவைத் தலைவர் பெரியசாமி, பெங்களூருத் தமிழ்ச்சங்கத் தலைவர் கோ.தாமோதரன், முன்னாள் செயலாளர் ஸ்ரீதரன், முகமது நளபாட், கோபிநாத், விஸ்வநாத், ஐயர் உள்ளிட்ட ஏராளமானோர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் தென் இந்திய ஒருங்கிணைப்பாளரும், தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஜெயந்தி விழா குழுத் தலைவருமான‌ பைப்பனஹள்ளி டி.ரமேஷ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட திருவள்ளுவர் தின விழாவில் பெரும்பாலான தமிழர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். விழாவில் திருவள்ளுவர் சிலை முன்பு பொங்கல் வைத்து கொண்டாடினர். பொய்க்கால் குதிரை பொம்மலாட்டம் ஆடல் பாடல் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவில் திரளாக தமிழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செய்தனர். வரும் ஆண்டுகளில் திருவள்ளுவர் ஜெயந்தி விழாவை தொடர்ந்து சிறப்பாக நடத்தப்படும் என்று பைப்பனஹள்ளி டி.ரமேஷ் தெரிவித்தார். பெங்களூரில் திருவள்ளுவர் ஜெயந்தியை கர்நாடக தமிழர்களின் சார்பில் கொண்டாடிய பைப்பனஹள்ளி டி.ரமேஷிற்கு அனைவரும் தங்களின் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

முந்தைய கட்டுரைகர்நாடக மாநில திமுக சார்பில் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா சிறப்பாக கொண்டாட்டம்
அடுத்த கட்டுரைபுதிய தொழில்நுட்பத்தின் மூலம் புற்றுநோயைக் கண்டறிந்து சிகிச்சை: ஃபோர்டிஸ் மருத்துவமனையின் சிறுநீரகவியல் மருத்துவர் மோகன் கேசவ‌மூர்த்தி

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்