முகப்பு Bengaluru பெங்களூரில் தமிழ்ப் புத்தக திருவிழா இன்று தொடக்கம்

பெங்களூரில் தமிழ்ப் புத்தக திருவிழா இன்று தொடக்கம்

0

பெங்களூரு, டிச. 1: பெங்களூரில் தமிழ்ப் புத்தக திருவிழா இன்று தொடங்கி டிச. 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது

பெங்களூரு அம்பேத்கர் வீதியில் உள்ள தி இன்ஸ்டிடுயூட் ஆப் என்ஜினியர்ஸ் வளாகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.1) தொடங்கி 10 நாட்கள் தமிழ்ப் புத்தக திருவிழா நடைபெற உள்ளது. தொடக்க விழாவில் மாநில அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ்குண்டுராவ் அவர்கள், சிவாஜிநகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ரிஸ்வான் அர்ஷத், மக்களவை உறுப்பினர் பி.சி.மோகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

புத்தக திருவிழாவில் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, பொது அறிவு, அறிவியல், இலக்கியம், இலக்கணம், ஆன்மீகம், புராணம், நாடகம், வரலாற்று சிறப்புமிக்க நாடகங்கள், நாவல்கள், ஓவியம் சிறுவர்களின் அறிவு வளர்ச்சி மற்றும் விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும் வகையிலான புத்தகங்கள் இடம் பெறுகிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கான மொழி பயிற்சி, வினாடி விடை, கவிதை, கட்டுரைப்போட்டிகள் நடைபெற உள்ளன. அதோடு மட்டுமல்லாமல் நாடக அரங்கேற்றம், தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எழுதி உள்ள நூல்கள் அரங்கேற்றம் செய்யப்பட உள்ளது. சிறந்த நூல்களுக்கு ரூ. 25 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது.

10 நாட்கள் நடக்கும் விழாவில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை எழுதியுள்ள பெரியாரும் அறிவியலும், இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக விஞ்ஞானி டெல்லி பாபு எழுதிய கையறுகே கிரிடம், எழுத்தாளர் பி.சிவசுப்ரமணியம் எழுதியுள்ள வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் என்ற ஆங்கில நூல், பத்திரிக்கையாளர் எம்.எஸ்.மணி எழுதியுள்ள கவிகார்மா என்ற கன்னட நூல், எழுத்தாளர் அ.சௌரி எழுதியுள்ள திராவிடத்தால் எழுவோம், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழ் பரப்பும் நடையில் நின்றுயர் நாயகன், அறிஞர் குணா எழுதியுள்ள தமிழரின் தொன்மை நூல் திறனாய்வு, பத்திரிக்கையாளர் இரா.வினோத் எழுதியுள்ள தோட்டக்காட்டீ ஆகிய நூல்கள் வெளியிடப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரையுடன் மாணவர்கள் பங்கேற்கும் நேருக்கு நேர் நிகழ்ச்சி நடக்கிறது. இஸ்ரோவின் திரவ உந்துவிசை மைய இயக்குனர் நாராயண், கவிஞர் அறிவுமதி, நெல்லை ஜெயந்தா, பேராசிரியர் அப்துல்காதர், பார்த்திபராஜா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

விழாவின் இறுதி நாளில் தமிழறிஞர் குணாவுக்கு தமிழ் பெருந்தகை விருதும், 25பேருக்கு கர்நாடக தமிழ் ஆளுமை விருது வழங்கப்படுகிறது. இதில் தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும் வேலூர் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைகழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். புத்தக திருவிழாவின் சிறப்பைக் காட்டு வகையிலான‌ சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது.

விழாவில் பெங்களூரு வாழ் தமிழர்களும், கர்நாடகம் மட்டுமின்றி, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் வாழும் தமிழர்கள் அனைவரும் தமிழ்ப் புத்தக திருவிழாவிற்கு வருகை புரிந்து, திருவிழா வெற்றியடைய வாழ்த்துமாறு கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

முந்தைய கட்டுரைஇரண்டு முறை உயிர் பெற்ற குழந்தை
அடுத்த கட்டுரைலுலு பியூட்டி ஃபெஸ்டில் சின்மயி, குஷால் கே.பி தேர்வு

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்