முகப்பு Politics பெங்களூரில் டிச. 25 இல் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா: தமிழக அமைச்சர் அன்பில்...

பெங்களூரில் டிச. 25 இல் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா: தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

0

பெங்களூரு, டிச. 3: கர்நாடக மாநில திமுக சார்பில் மறைந்த பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா டிச. 25‍ ஆம் தேதி பெங்களூரில் நடைபெறுகிறது. இதில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்.

இது குறித்து திமுக மாநில அமைப்பாளர் ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பெங்களூரில் டிச. 25 ஆம் தேதி நடைபெறும் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து கன்டை மொழியில்
எழுதப்பட்டுள்ள வரவாற்று வாழ்க்கை நூல் வெளியிடப்படுகிறது.

மேலும் இதே போல் ஜனவரி 13 – ஆம் தேதி கர்நாடக மாநில திமுக சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் பங்கேற்று பேசுகிறார். இந்த 2 விழாக்கள் குறித்த நிகழ்ச்சி நிரல் விரைவில் வெளியிடப்படும். கர்நாடக மாநில திமுக சார்பில் நடத்தப்படும். இந்த 2 முக்கிய விழாக்கள் குறித்து கழக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 4 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு பெங்களூரு ராமச்சந்திரபுரத்தில் உள்ள திமுக அலுவலகம் கலைஞ‌ரகம் தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் நடைபெறுகிறது.

இதில் மாநில நிர்வாகிகள் தலைமை பொது குழு உறுப்பினர்கள் இளைஞர் அணி நிர்வாகிகள் இலக்கிய அணி நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் தொமுச பேரவை நிர்வாகிகள் கழக முன்னோடிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று மாநில அமைப்பாளர் ந.இராமசாமி அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக பெங்களூரில் நடைபெறும் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் குறித்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி சந்தித்து, விழாவிற்கு வருகை புரிய அழைப்பு விடுத்தார்.

முந்தைய கட்டுரைகீதா ஜெயந்தியை முன்னிட்டு இஸ்கான் ஸ்ரீ ராஜாதிராஜா கோவிந்தா கோவிலில் கீதா தான யக்ஞ மகா உற்சவ‌த்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தார்
அடுத்த கட்டுரைConfiscation of gold :மங்களூரு விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் 7,692 கிராம் 24 காரட் தங்கம் பறிமுதல்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்