முகப்பு Politics பெங்களூரில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை மாநில திமுக சார்பில் சிறப்பாக கொண்டாட முடிவு

பெங்களூரில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை மாநில திமுக சார்பில் சிறப்பாக கொண்டாட முடிவு

0

பெங்களூரு, ஏப். 11: பெங்களூர் 115 வது வட்டம் வண்ணாரப்பேட்டை திமுக கிளை செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 9) காலை நடந்தது. கூட்டத்திற்கு எம்.தியாகராஜன் தலைமை தாங்கினார் கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந. இராமசாமி முன்னிலை வகித்தார். இதில் கிளை செயலாளர் ஜான் ரபேல் வரவேற்று பேசினார். இந்த செயற்குழு கூட்டத்தில் கேப்டன் குமரேசன், ஆனந்தன், மகேந்திரன், ராமலிங்கம், கோபி, ரமேஷ், கணேசன் கலந்து கொண்டனர்.

செயற்குழு கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி திக்கெட்டும் புகழ் பரப்பும் வகையில் மற்ற மாநிலங்கள் பின்பற்றக்கூடிய வகையில் நல்லாட்சி நடத்தி வருகிறது. தமிழக அரசின் மக்கள் நல திட்டங்களுக்கு ஆளுந‌ர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி திருப்பி அனுப்பி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதை இந்த செயற்குழு கண்டிக்கிறது.

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஜூன் மாதம் கிளை கழகங்கள் சார்பில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தலைமை கழகம் அறிவிப்பிற்கு இணங்க கர்நாடக மாநிலத் திமுக செயல்படுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறிப்பாக திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை பெங்களூரில் மிகச் சிறப்பாக கொண்டாடி கலைஞரின் தியாகத்தை போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து மக்களுக்கும் நல உதவிகள் வழங்குவது என்று இந்த செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முந்தைய கட்டுரைஇன்ஃபோசிஸ் திரும‌தி சுதாமூர்த்தி, ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் மடத்திற்கு “பத்ம பூஷண் விருதுடன்” வருகை
அடுத்த கட்டுரைநாராயணா ஹெல்த், துண்டிக்கப்பட்ட 11 வயது சிறுவன் கையை மிகவும் சிக்கலான மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் மீட்டெப்பு

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்