முகப்பு Politics பாஜக என்பது ஊழல் கட்சி என்று மக்களே சொல்லும் அளவு அக்கட்சி பெயர் எடுத்துள்ளது: கரூர்...

பாஜக என்பது ஊழல் கட்சி என்று மக்களே சொல்லும் அளவு அக்கட்சி பெயர் எடுத்துள்ளது: கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி

0

பெங்களூரு, ஏப். 21: பாஜக என்பது ஊழல் கட்சி என்று மக்களே சொல்லும் அளவு அக்கட்சி பெயர் எடுத்துள்ளது என்று தமிழ்நாடு கரூர் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்தார்.

பெங்களூரு ரேஸ்கோர்ஸ்சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அக்கட்சியின் தொழிலாளர்ப்பிரிவின் மாநிலத் துணை தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் கர்நாடகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே முக்கியமான தேர்தல். கர்நாடகத்தில் பாஜகவிற்கு எதிரான அலை உள்ளது. இதனால் மக்கள் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டும் என்று இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கர்நாடகத்தில் 40 சத ஊழல் அரசு பாஜக என்பதனை அனைவரும் உணர்ந்துள்ளனர். அதனால் மாநிலத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் கடுமையாக களப்பணியாற்றி வருகிறது. நிச்சயமாக கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி 150 இடங்களில் வெறி பெற்று ஆட்சி அமைக்கும். அப்படி ஆட்சியை பிடித்தால் நிச்சயமாக ஊழலற்ற, நியானமான ஆட்சியை காங்கிரஸ் கொடுக்கும். காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை வீடு வீடாக எடுத்துச் சென்று மக்களிடம் எங்களது வாக்குறுதியை சொல்வோம்.

காங்கிரஸ் கட்சி குறிப்பிட்ட அடையாளங்களை மக்களிடம் பார்ப்பதில்லை. காங்கிரஸ் கட்சி அனைத்து மக்களுக்குமான கட்சியாக விளங்குகிறது. குறிப்பாக பெங்களூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிக்க முடிவு செய்து, அதன்படி சென்று வருகின்றனர். அதே போல கேரன்டி கார்டுகளை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம் என்றார்.

பேட்டியின் போது பெங்களூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சேகர். அக்கட்சியின் தொழிலாளர் பிரிவு துணைத் தலைவர் விஸ்வநாதன், தென் மண்டல தொழிலாளர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் பையப்பனஹள்ளி ரமேஷ், தயாளன், பாண்டியன், கோபிசந்தர், சிவாஜி நகர் பிளாக் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், பெங்களூரு மாவட்ட விஜிலன்ஸ் குழு உறுப்பினருமான‌ ராஜேந்திரன், காந்திநகர் பிளாக் காங்கிரஸ் தலைவர் சரவணன், ஐயர், கோபிநாத் உள்ளிட்டோர் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

முந்தைய கட்டுரைகிரெடோ ஹெல்த்: நாள்பட்ட நிலை மேலாண்மைக்கான அறிவார்ந்த டிஜிட்டல் துணை
அடுத்த கட்டுரைஒடுக்கப்பட்டவர்களின் மேன்மைக்காக உழைத்தவர் அண்ணல் அம்பேத்கர்: பைப்பனஹள்ளி ரமேஷ்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்