முகப்பு Bengaluru பரிணாம் அறக்கட்டளை உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியுடன் இணைந்து ப்ராஜெக்ட் உத்தரஹள்ளி என்ற தனது 191வது...

பரிணாம் அறக்கட்டளை உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியுடன் இணைந்து ப்ராஜெக்ட் உத்தரஹள்ளி என்ற தனது 191வது சோட்டே கதம் திட்டம் நிறைவு

0

பெங்களூரு, டிச. 14: பரிணாம் அறக்கட்டளை உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியுடன் இணைந்து ப்ராஜெக்ட் உத்தரஹள்ளி என்ற தனது 191வது சோட்டே கதம் திட்டத்தை நிறைவு செய்தது.

இந்தத் திட்டமானது உத்தரஹள்ளியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவசியா வித்யாலயாவைப் புதுப்பிப்பதை உள்ளடக்கியது. டிசம்பர் 12 ஆம் தேதி, உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியின் தலைவர் பி.ஏ. பிரபாகர், தலைமை நிர்வாக அதிகாரி, பரிணாம் மற்றும் உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியின் தலைவர் பிரேம்குமார் ஆகியோர் முன்னிலையில் பள்ளி திறந்து வைக்கப்பட்டது.

இதில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பரிணாம் மற்றும் உஜ்ஜீவன் நிறு உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். அப்பள்ளியின் மாணவர்கள் பாடல்களை பாடி, பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளை வழங்கினர். இறுதியில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

முந்தைய கட்டுரைபெங்களூரு ஜெயநகரில் உலகின் மிகப்பெரிய கரதண்ட் கண்காட்சி
அடுத்த கட்டுரைகர்நாடக மாநில திமுக இளைஞரணியில் உறுப்பினர்கள் சேர்ப்பு

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்