முகப்பு Bengaluru தூங்குபவர்களை எழுப்பி எச்சரிக்கை அடையச் செய்வது பத்திரிகைகள்தான்: ராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ்

தூங்குபவர்களை எழுப்பி எச்சரிக்கை அடையச் செய்வது பத்திரிகைகள்தான்: ராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ்

0

பெங்களூரு, பிப். 10: தூங்குபவர்களை எழுப்பி எச்சரிக்கை அடையச் செய்வது பத்திரிகைகள்தான். சமுதாயம் வளர பத்திரிகைகள் வளர வேண்டும். நமது தாய் மொழியில் வெளியாகும் தமிழ் பத்திரிகைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று கர்நாடக சுற்றுலாத்துறை இயக்குநர் ராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ் அழைப்பு விடுத்தார்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் தினத்தை யொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூத்த பத்திரிகையாளர்களுக்கு கர்நாடக தமிழ் இதழியல் சாதனையாளர் விருதுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியது: ஒரு கட்டத்தில் நான் ஒரு இதழில் பணியாற்றியதால், அடிப்படையில் நானும் ஒரு பத்திரிகையாளர் பெருமையுடன் சொல்லி கொள்கிறேன் . மொழிப்பற்று இல்லை என்றால் பத்திரிகை வளராது. தமிழ் பத்திரிகைகளால் மட்டுமே தமிழ் மொழியும், இலக்கியமும் வளர்கின்றன. தூங்குபவர்களை எழுப்பி எச்சரிக்கை அடைய செய்வது பத்திரிகைகள்தான்.

அவர்களால் மட்டுமே சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்த முடியும். சமுதாயம் வளர பத்திரிகைகள் வளர வேண்டும். நமது தாய் மொழியில் செயல்படும் தமிழ் பத்திரிகைகளை ஊக்குவிக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் மேம்படுத்தவும், மேம்படவும் முடியும் . நமது கடமையை செய்வோம். உரிமையை பெறுவோம். பத்திரிகைகள் தைரியமாக உண்மை செய்திகளை எழுதலாம் என்றார்.

நிகழ்ச்சியில் தினச்சுடரின் ஆசிரியர் அமுதன், ஊடக அகாதெமியின் முன்னாள் தலைவர் சித்தராஜு, மாநில பிற்படுத்தப்பட்டோர் பத்திரிகையாளர் சங்க முன்னாள் தலைவர் எம்.எஸ்.மணி, திமுக மாநில அமைப்பாளர் ந.ராமசாமி, மாநில அதிமுக செயலாள‌ர் எஸ்.டி.குமார், தமிழ் சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், தமிழ் பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் தனஞ்செயன், கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் நிர்வாகிகள் முத்துமணி நன்னன், மதியழகன், க.தினகரவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முந்தைய கட்டுரைஆகாஷ் பைஜூ’ஸ், நீட் (NEET) விரும்புவோருக்கு, சுய மதிப்பீட்டுக் கருவி அறிமுகம்
அடுத்த கட்டுரைதமிழாசிரியர், தமிழ் பத்திரிகையாளர் சங்கங்களின் சார்பில் பொங்கல் விழா

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்