முகப்பு Bengaluru திருவள்ளுவர் தினத்தில் திரளாக திரண்டு தமிழர்களின் ஒற்றுமையை காண்பிக்க‌ வேண்டும்: பைப்பனஹள்ளி டி.ரமேஷ்

திருவள்ளுவர் தினத்தில் திரளாக திரண்டு தமிழர்களின் ஒற்றுமையை காண்பிக்க‌ வேண்டும்: பைப்பனஹள்ளி டி.ரமேஷ்

0

பெங்களூரு, ஜன. 13: திருவள்ளுவர் தினத்தில் திரளாக திரண்டு தமிழர்களின் ஒற்றுமையை காண்பிக்க‌ வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் தென் இந்திய ஒருங்கிணைப்பாளரும், தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஜெயந்தி விழா குழுத் தலைவருமான‌ பைப்பனஹள்ளி டி.ரமேஷ் தெரிவித்தார்.


பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை உள்ள பகுதியில் ஜன. 15 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவள்ளுவர் ஜெயந்தி விழா பைப்பனஹள்ளி டி.ரமேஷ் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் தமிழர்களின் ஒற்றுமையை காண்பிக்க அனைவரும் திரளாக திரண்டு வந்து திருவள்ளுவர் ஜெயந்தியை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் உலக மாந்தர்கள் அனைவருக்கும் சொந்தமானவர். என்றாலும் தமிழர்களுக்கு அவர் தலையானவர். வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என பாரதியாரும், “வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” என பாரதிதாசனும் புகழ்ந்து பாடியுள்ளனர். அப்பேர்ப்பட்ட புகழுடைய திருவள்ளுவரை நாம் கொண்டாடுவது அவசியம். கடந்த காலங்களில் திருவள்ளுவர் ஜெயந்தியை நாம் சிறப்பாக கொண்டாடி வந்தோம். என்றாலும் கரோனா தொற்றைத் தொடர்ந்து சில ஆண்டுகள் திருவள்ளுவர் ஜெயந்தி கொண்டாடப்படவில்லை. இதனை கருத்தில் கொண்டு தமிழர்களிடம் மட்டுமின்றி, மற்ற மொழியின‌ரிடம் திருவள்ளுவரைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பெங்களூரு அல்சூரி திருவள்ளுவர் ஜெயந்தியை கொண்டாட முடிவு செய்து அதற்கான பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.

எனவே தமிழர்கள் அனைவரும் மதம், ஜாதி கடந்து திரளாக திரண்டு வந்து அல்சூரில் உள்ள திருவள்ளுவர் சிலை உள்ள பகுதியில் ஜன. 15 ஆம் தேதி திருவள்ளுவர் ஜெயந்தியை கொண்டாட வேண்டும். திருவள்ளுவர் சிறப்பிப்பதன் மூலம் தமிழர்கள் தங்களது ஒற்றுமையை காட்ட வேண்டும். எனவே வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.15) காலை 9 மணி முதல் திருவள்ளுவர் சிலை அருகே திரளாக வந்து ஜெயந்தியை சிறப்பிக்க வேண்டும். இதில் கலந்து கொள்ள முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்றார்.

முந்தைய கட்டுரைசர்க்கான்– 2023: இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி; தீங்கற்ற நோய் மற்றும் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு புதிய வழி
அடுத்த கட்டுரைகர்நாடக மாநில திமுக சார்பில் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்