முகப்பு Bengaluru திருவள்ளுவரை சிறப்பாக கொண்டாடுவதன் மூலம் தமிழர்கள் தலை நிமிர்ந்து நிர்ப்போம்: பைப்பனஹள்ளி டி.ரமேஷ்

திருவள்ளுவரை சிறப்பாக கொண்டாடுவதன் மூலம் தமிழர்கள் தலை நிமிர்ந்து நிர்ப்போம்: பைப்பனஹள்ளி டி.ரமேஷ்

திருவள்ளுவர் ஜெயந்தியை கொண்டாட அனைவரும் பெங்களூரு அல்சூருக்கு திரளாக திரண்டு வாரீர்

0

பெங்களூரு, ஜன. 14: திருவள்ளுவரை சிறப்பாக கொண்டாடுவதன் மூலம் கர்நாடகத்தில் தமிழர்கள் தலை நிமிர்ந்து நிர்ப்போம் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் தென் இந்திய ஒருங்கிணைப்பாளரும், தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஜெயந்தி விழா குழுத் தலைவருமான‌ பைப்பனஹள்ளி டி.ரமேஷ் தெரிவித்தார்.

பெங்களூரு அல்சூரில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள இடத்தில் சனிக்கிழமை இரவு திருவள்ளுவர் ஜெயந்தி பணிகளை மேற்பார்வையிட்ட, அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: பெங்களூரு அல்சூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

திருவள்ளுவர் ஒரு தமிழ் கவிஞர்-தத்துவவாதி ஆவார். அவர் திருக்குறளை இயற்றினார். இது தமிழ் இலக்கியத்தில் நெறிமுறைகள் மற்றும் அறநெறி பற்றிய ஒரு படைப்பாகும். திருவள்ளுவர் கிமு 2 ஆம் நூற்றாண்டு மற்றும் கிபி 5 ஆம் நூற்றாண்டுக்கு இடையில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. திருக்குறள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. திருக்குறள் அறம் உள்ளிட்ட வாழ்க்கையின் அடிப்படை நெறிமுறைகளைக் கையாள்கிறது. இந்த நூல் சமூக யதார்த்தங்கள் அல்லது வாழ்க்கையின் உண்மைகளைப் பற்றி விவாதிக்கிறது. மனித அன்பில் வாழ்கிறது. தனிநபரின் நற்பண்புகளை இந்தப் படைப்பு வலியுறுத்துகிறது. உலகில் அதிக முறை மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்களில் ஒன்று திருக்குறள்.

அப்பேர்பட்ட திருக்குறளை தமிழில் வடித்த திருவள்ளுவரை கொண்டாடுவது தமிழர்களின் கடமையாகும். இதனைக் கருத்தில் கொண்டு, திருவள்ளுவர் ஜெயந்தியை கொண்டாட முடிவு செய்துள்ளோம். எனவே தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து மொழியினரும், ஜாதி, மதம் கடந்து ஞாயிற்றுக்கிழமை (ஜன. 15) காலை 9 மணியளவில் நடைபெறும் திருவள்ளுவர் ஜெயந்தி நடைபெறும் அல்சூர் ஏரிக்கரைக்கு திரளாக திரண்டு வந்து, நமது பலத்தையும், ஒற்றுமையையும் காண்பிக்க வேண்டும். திருவள்ளுவரை கொண்டாடுவதில்நம்மிடையே எந்த கருத்து வேறுபாடும் வேண்டாம். அனைவரும் ஒற்றுமையாக ஓர் அணியில் திரண்டு, திருவள்ளுவர் ஜெயந்தியை சிறப்பாக கொண்டாடி, நமது பலத்தை நிரூப்பிப்போம். திருவள்ளுவரை சிறப்பாக கொண்டாடுவதன் மூலம் தமிழர்கள் தலை நிமிர்ந்து நிர்ப்போம். திருவள்ளுவர் ஜெயந்தியை கொண்டாட அனைவரும் அல்சூருக்கு நாளை திரளாக திரண்டு வாரீர் என்றார்.

முந்தைய கட்டுரைபெங்களூரு அல்சூரில் திருவள்ளுவர் ஜெயந்தி விழா நாளை கொண்டாட்டம்
அடுத்த கட்டுரைகர்நாடக மாநில திமுக சார்பில் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா சிறப்பாக கொண்டாட்டம்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்