முகப்பு Politics தமிழ் இன‌ம் காக்க பாடுபட்டவர் பேராசிரியர் க.அன்பழகன்: ந.இராமசாமி புகழாரம்

தமிழ் இன‌ம் காக்க பாடுபட்டவர் பேராசிரியர் க.அன்பழகன்: ந.இராமசாமி புகழாரம்

0

பெங்களூரு, டிச. 19: தமிழ் இன‌ம் காக்க பாடுபட்டவர், முத்தமிழ் அறிஞர், தமிழின தலைவர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதிக்கு கடைசி வரை உறுதுணையாக இருந்தவர் பேராசிரியர் க.அன்பழகன் என்று கர்நாடக மாதில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி புகழாரம் சூட்டினார்.

கர்நாடக மாநில திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை (டிச. 19) பெங்களூரு இராமச்சந்திரபுரத்தில் உள்ள மாநிலத் திமுக அலுவலகமான கலைஞர் வளாகம், தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் பேராசிரியர் பிறந்த நாள் விழா நடந்தது. இதில் திருவுருவப்படத்திற்கு மலர் ‎மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநில அமைப்பாளர் ந.இராமசாமி பேசுகையில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி வழியில் திராவிட கொள்கைகளை தனது உயிர் மூச்சாக கொண்டு இறுதி வரை தமிழ் இன‌ம் காக்க பாடுபட்ட தலைவர் இனமான‌ பேராசிரியர் க.அன்பழகன். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞருக்கு இறுதி வரை உறுதுணையாக இருந்தவர் என்று புகழாரம் சூட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் கர்நாடக மாநில திமுக அவைத் தலைவர் மொ.பெரியசாமி, பொருளாளர் கே.தட்சிணாமூர்த்தி, எம்.ஆர்.பழம்நீ, மாநில துணை அமைப்பாளர் ஜி.ராமலிங்கம், மகளிர் அணியைச் சேர்ந்த‌ குமுதா தாமோதரன், பொதுக்குழு உறுப்பினர்கள் சிக்பெட் ராமன், கே.சிகாமணி, இரா.அன்பழகன், மைசூரு எஸ்.பிரான்சிஸ், பத்ராவதி எல்.சிவலிங்கம், முருகமணி இரா.நாம்தேவ், வி.எஸ்.மணி, ஏ.டி.ஆனந்தராஜ், கே.எஸ்.சுந்தரேசன், டி.சிவமலை, மு.ராஜசேகர், மு.முருகானந்தம், முருகு தர்மலிங்கம், போர்முரசு கதிரவன், ஆற்காடு அன்பழகன், வெள்.செல்வகுமார், சற்குணம், மங்கம்மாள், பி.காயத்ரி, அமுதா பட்டுசாமி, மணிமேகலை, பொன்னம்பலம், திருமலை, நாராயணசாமி, பிரபு, ஜி.குமார், ஜெயபால், காஞ்சி சிவசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முந்தைய கட்டுரைஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனையின் இதய செயலிழப்பு கிளினிக் மற்றும் டேகேர் மையம் அறிமுகம்
அடுத்த கட்டுரைபெங்களூரில் உள்ள நெக்ஸஸ் சாந்திநிகேதன் மாலில் ஸ்டாடிக்கின் ஃபாஸ்ட் மின் வாகன‌ சார்ஜிங் நிலையம் தொடக்கம்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்