முகப்பு Politics தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, நாட்டின் பிரதமர் ஆவதற்கான தகுதி உள்ளது: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, நாட்டின் பிரதமர் ஆவதற்கான தகுதி உள்ளது: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

0

பெங்களூரு, ஜன. 22: தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, நாட்டின் பிரதமர் ஆவதற்கான தகுதி உள்ளது என்று தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

பெங்களூரில் திமுக சார்பில் பொங்கல் விழா கூட்டம் நடைபெற்று வருகிறது. கூடிய உள்ள கூட்டத்தை பார்க்கையில், இந்த கூட்டம் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் அரங்கத்தில் நடைபெறுகிறதா?. அல்லது சென்னையில் உள்ள கலைஞர் அரங்கத்திலா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த மேடையில் பலர் கன்னடத்தில் பேசிய போது எனக்கு அவர்கள் பேசியது புரியவில்லை என்றாலும், அவர்கள் தமிழ், தமிழ்நாடு, திராவிடம் என்ற வார்த்தைகள் பரவலாக முக்கியம் பெற்றுள்ளது என்பது புரிகிறது. பெரும்பாலும் அயல்நாடுகள், மாநிலங்களில் வாழுகின்ற தமிழர்களிடம் தமிழ் உணர்வு எஞ்சி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் இங்கே இருந்து செல்லும் போது மடித்த சால்வையை மட்டுமில்லாது, நல்ல நினைவுகளை எடுத்துச் செல்வேன். கர்நாடக மாநில திமுக‌ அமைப்பாளர் ந.இராமசாமி, தலைவர் முதல்வரை சந்தித்து, என்னிடம் தேதி கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் என்னை கர்நாடகத்திற்கு அழைத்துச் சென்று கூட்டம் நடத்த அனுமதி வழங்கி உள்ளார். அவருக்கும், கட்சியின் மாநில நிர்வாகளுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் அனைவருக்கும் விடுமுறை இருக்கும். எனவே அவர்கள் விடுமுறையை வெளியில் சென்று விரும்பியபடி கழிக்க விரும்புவார்கள். ஆனால் இன்று நான் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதால், இங்கே திரளாக வந்து என்னை வாழ்த்தி, பாராட்ட வந்துள்ளது உள்ளபடியே மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெங்களூருக்கு வந்த உடன் இங்கே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, கௌரவம் செய்தது பெருமை அளிக்கிறது. குமரி முனையில் 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்த, முத்தமிழர் தலைவர் கலைஞர் அவர்களின் ஏற்பாட்டில், பெங்களூரில், அன்றை கர்நாடக முதல்வருடன் முறையாக பேசி, மூடிக்கிடந்த திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் என்பது பெருமிதம் கொள்ளச் செய்கிறது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படாமல் இருந்தப்போதே திமுகவின் கிளைக்கழகம் இங்கு தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே போல் தலைமை பல்வேறு போராட்டங்களை அறிவித்தால், தமிழ்நாட்டிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், கர்நாடகத்திலும் திமுகவினர் போராட்டம் நடத்துவர்கள் என்பது பெருமை அளிக்கிறது. இங்கு உள்ளவர்களை பார்க்கும்போது உணர்வு பூர்வமான எண்ணம் அதிக அளவில் எழுகிறது. இம்மாநிலத்தில் உள்ளவர்களும் தற்போது மொழி வேற்றுமையை மறந்து திராவிட மாடல் என்பதை அதிக அளவில் பேசி வருவதற்கு, உள்ளபடியே கலைஞரின் தவப்புதல்வர் தமிழ்நாட்டின் முதல்வரின் நடவடிக்கைதான் என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தக் கூட்டத்தில் பங்கு பெற்றவர்கள் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, நாட்டின் பிரதமர் ஆவதற்கான தகுதி உள்ளது என்று பேசினார்கள். அப்படிபட்ட தலைமையின் கீழ் நான் பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை, அண்ணாவின் கோரிக்கையை ஏற்று அன்றைக்கே போராட்டம் நடத்தியவர்கள் கர்நாடகத்தைச் சேர்ந்த திமுகவினர். அதே போல் தமிழ்நாட்டின் பேரிடர் பாதிப்பு ஏற்படும் போதெல்லாம், நிதி அளித்து உதவியவர்கள் கர்நாடகத்தைச் சேர்ந்த தமிழ்ச் சொந்தங்கள். சிறப்பு வாய்ந்த திருவள்ளுவருக்கும் சேர்ந்து இங்கு இன்று பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. திராவிடம் என்று ஒன்று இருந்தால் ஆரியம் என்று ஒன்று இருக்கும். திராவிடம் இங்கிருந்தது. ஆரியம் எங்கிருந்தோ வந்தது. அதை எதிர்த்து அப்போதிருந்தே நாம் போராடி வந்திருக்கிறோம். அதில் வழக்கறிஞர்களின் பங்களிப்பு அதிகம் உள்ளது. வழக்கறிஞர்கள் மட்டுமின்றி நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே அனைவரின் பணியாக உள்ளது. அடுத்த முறை கர்நாடகத்தில் திமுக சார்பில் கூட்டம் நடத்தும் போது, தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி அவர்களை அழைத்து வந்து பேச வைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும். கர்நாடகத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர், தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வரை பேச வைத்து அழகு பார்த்தது போல, தமிழ்கத்தின் எதிர்காலம் அமைச்சர் உதயநிதி அவர்களையும் பேச வைத்து கர்நாடக திமுகவினர் அழகு பார்க்க வேண்டும் என்றார்.

முன்னதாக நிகழ்ச்சியில் டாக்டர் மது பிரசாத் எழுதிய திராவிட கீர்த்திய ஷிகரா தளபதி எம்.கே.ஸ்டாலின் என்ற புத்தகத்தை அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அதனை கன்னட வளர்ச்சி ஆணையத்தின் முன்னாள் தலைவர் சித்தராமையா பெற்றுக்கொண்டார்.

கூட்டத்தில் திமுக அமைப்பாளர் ந.இராமசாமி, மாநில அவைத் தலைவர் மொ.பெரியசாமி, மாநில இளைஞர் அணி துணை அமைபாளர் மு.இராஜசேகர், திமுக மாநில பொருளாளர் கே.தட்சிணாமூர்த்தி, துணை அமைப்பாளர்கள் ஜி.இராமலிங்கம், பி.இராஜேந்திரன், குமுதா, மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சிக்பெட் எம்.ராமன், கே.சிகாமணி, இரா. அன்பழகன், மைசூரு எஸ்.பிரான்சிஸ், பத்ராவதி எல்.சிவலிங்கம், முருகமணி செல்வம், முன்னாள் மாநில நிர்வாகிகள் இரா.நாமதேவ், வி.எஸ்.மணி, ஏ.டி.ஆனந்தராஜ், கே.எஸ். சுந்தரேசன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ, ஹுன்சூர் டாக்டர் மதுபிரசாத், எம்.பிரசன்னகுமார், கனகராஜ், டாக்டர் கே.வி.ஹரீஷ், ஜமகண்டி ஆதியப்பா மீசி, அசோக் சக்ரவர்த்தி, நாகராஜ்,

வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த‌ எம்.நடேஷ், ஆர்.பாலாஜிசிங், இளைஞர் அணி நிர்வாகிகள் டி.சிவமலை, எம்.முருகானந்தம், தினேஷ், மு.பரசுராமன் , இலக்கிய அணி நிர்வாகிகள் புலவர் முருக தருமலிங்கம், போர்முரசு கதிரவன் ஆற்காடு அன்பழகன், எம்.ஆர். பழம்நீ, வெள். செல்வக்குமார், மகளிர் அணி நிர்வாகிகள். அம்மாயி ஜெயவேல், சற்குணா மங்கம்மாள், பி.காயத்திரி, அமுதாபட்டுசாமி, சாந்தி, மணிமேகலை தொ.மு.ச பேரவை நிர்வாகிகள் மு.நாகப்பராஜன், மு.பொன்னம்பலம், க.நாராயணசாமி, சி.ஜெயயால், த.திருமலை, தயாள்குமார், து.பிரபு, ஜி.குமார், காஞ்சி சிவசங்கரன்,

கிளை கழக நிர்வாகிகள் செல்வம், சகாயபுரம் ஆர்.குப்புசாமி, சகாயபுரம் கணேசன், அல்சூர் பலராமன், செ.தமிழ்ச்செல்வன், டி.துரை, எம்.குப்புசாமி, உட்லேண்ட்ஸ் கணேசன், எ.தங்கராஜ், ஏ.இராஜேந்திரன், எஸ்.ஏழுமலை, தங்கவயல் அருணாசலம், பொன்.சாரங்கபாணி, வே.முனிரத்தினம், கு.அறிவழகன், எ.வி.மதியழகன், சேகரன், மணிவண்ணன், ஜே.மதிவாணன், மைசூர் அரவிந்த், ரஜினி ஆறுமுகம், பத்திராவதி ஆர்.கோவிந்தசாமி, கே.மணி, கே.பி.உத்தமராயன், ஆர்.சண்முகம், சிவமொக்கா எஸ்.நசுருல்லா, குப்புசாமி, மங்களூர் ஆர்.சண்முகம், மாநில திமுக தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த இரா.கணபதி ஆகியோர் பங்கேற்றனர்.

முந்தைய கட்டுரைபெங்களூரின் புகழ்பெற்ற ஃபேஷன் பிராண்டான பி.என்.ராவின் 100 வது ஆண்டு கொண்டாட்டம்
அடுத்த கட்டுரைபி என் ராவ் குழுமத்தின் நிறுவனர் மறைந்த பி என் ராவின் மார்பளவு சிலை திறப்பு

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்