முகப்பு Bengaluru தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட நாள் வாழ்ந்து தமிழ்நாடு மட்டுமின்றி, வெளி மாநிலம், நாடுகளில் வாழும்...

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட நாள் வாழ்ந்து தமிழ்நாடு மட்டுமின்றி, வெளி மாநிலம், நாடுகளில் வாழும் தமிழர்கள் நலனைக் காக்க வேண்டும்: ந.இராமசாமி

0

பெங்களூரு, மார்ச் 23: தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான‌ தளபதி மு.க.ஸ்டாலின் நீண்ட நாள் வாழ்ந்து, தமிழ்நாடு மட்டுமின்றி, வெளி மாநிலம், நாடுகளில் வாழும் தமிழர்கள் நலனைக் காக்க வேண்டும் என்று கர்நாடக மாநிலம் திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தெரிவித்தார்.

பெங்களூரு சேஷாத்ரிபுரத்தில் உள்ள‌ கர்நாடக பார்வையற்றோர் காப்பகத்தில் வியாழக்கிழமை கர்நாடக மாநில திமுக இளைஞரணி சார்பில் திமுகவின் தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறநாள் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் விழாவில் 7 கிலோ எடைக் கொண்ட கேக்கை வெட்டி, காப்பகத்தில் இருந்த 60 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இத்துடன் இனிப்பும், அறுசுவை உணவும் வழங்கப்பட்டன.

இதில் மாநில திமுக அமைப்பாளர் ந.ராமசாமி பேசியது: திமுகவின் தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறநாள் விழா பார்வையற்றோர் காப்பகத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது மற்றற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தளபதி மு.க.ஸ்டாலின் நீண்ட நாள் வாழ்ந்து, தமிழ்நாடு மட்டுமின்றி, வெளி மாநிலம், நாடுகளில் வாழும் தமிழர்கள் நலனைக் காக்க வேண்டும். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ் மக்களின் விடிவெள்ளியாக திகழ்கிறார் என்றார்.

விழாவில் மாநில இளைஞரணி நிர்வாகிகள் மு.ராஜசேகர், மு.முருகானந்தம், தினேஷ் டி யோகேந்திரா, வாசு, ஜே.முகமது ஆரிப், பிரசன்னா, டாக்டர் வி.வாசு, டி.பிரபு மற்றும் போர்முரசு கதிரவன், கி.சு. இளங்கோவன், ஆற்காடு அன்பழகன், ஆனந்தராஜ், பா.மூர்த்தி, சுந்தரேசன், ஜேம்ஸ், எம்.ஆர்.பழம்நீ, கரிகாலன், கே.கணேசன், சகாயபுரம் குப்புசாமி, உத்திரகுமார், மு.தாமோதரன், மகேஷ்பாபு, ஜி.நாகராஜ், மகளிர் அணி துணை அமைப்பாளர் காயத்ரி, கர்நாட மாநில திராவிடக் கழக தலைவர் ஜானகிராமன், திராவிட கழக பொதுக்குழு உறுப்பினர் ராஜா ராம் உட்பட ஏராளமான திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய கட்டுரைநெஃப்ரோபிளஸ் மற்றும் கிட்னி வாரியர்ஸ் அறக்கட்டளை, சார்பில்’முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தடுப்பு பராமரிப்பு’ என்ற தலைப்பில் மருத்துவ நிபுணர்களுடன் கலந்துரையாடல்
அடுத்த கட்டுரைபெங்களூரு போக்குவரத்து சவாலை சமாளிக்க ‘நம்ம யாத்ரி’ ஆட்டோ சேவை தொடக்கம்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்