முகப்பு Special Story தமிழர்கள் பண்பாட்டையும் மொழியையும் காக்க வேண்டும்: சு.குமணராசன்

தமிழர்கள் பண்பாட்டையும் மொழியையும் காக்க வேண்டும்: சு.குமணராசன்

0

பெங்களூரு, ஏப். 30: தமிழர்கள் பண்பாட்டையும் மொழியையும் காக்க வேண்டும் என்று இலெமுரியா அறகட்டளையின் நிறுவனத் தலைவரும், தமிழ் அறக்கட்டளைத் தலைவருமான‌ சு.குமணராசன் தெரிவித்தார்.

கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்கம், மும்பையில் இயங்கி வரும் இலெமுரியா அறகட்டளை, அமெரிக்காவில் இயங்கிவரும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழ்மன்றம், தமிழ் அறகட்டளை மற்றும் பாரதிய தாசன் மறுமலர்ச்சி மன்றம் ஆகியவை இணைந்த பாவேந்தர் பாரதிதாசரின் பிறந்த நாள் விழாவை உலக தமிழ் நாள் விழாவாக நேற்று பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள இன்ஸ்டிடுயூஷன் ஆப் அக்ரிகல்சுரல் டெக்னாலஜிஸ் அரங்கில் நடைபெற்றது.

டெய்சிராணி தமிழ்தாய் வாழ்த்து பாடினார். தினகரவேலு வரவேற்றார். பாரதிதாசன் ஆத்திச்சூடி என்ற பொது தலைமையில் கவிஞர் பாபுசசிதரன் தலைமையில் கவியரங்கம் நடந்தது. இதில் கவிஞர்கள் கண்ணதாதாசன், மா.கார்த்தியாயினி, குணவேந்தன், தேனி.இராஜேஷ், வீ.சரளா ஆறுமுகம் ஆகியோர் துணை தலைப்புகளில் கவிதை பாடினர். பின் பாரதிதாசன் நாட்டிய திருவிழாவில் ரெபேக்கா ஜான்பாஸ்கோ, சாரிகாபாரதி ஆகியோர் நாட்டியம் ஆடினர்.

பாரதிதாசன் பிறந்த நாள் விழா பேராசிரியர் மாணிக்கவாசகம் தலைமையில் நடந்தது. நா.காளிதாசம்மாள், அருட்தந்தை ஜெ.ஆ.நாதன் (எ) தமிழ்மறவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் பேசும் தமிழ் என்ற நூல் வெளியிடப்பட்டது. மும்பை இலமுரியா றகட்டளை தலைவர் சு.குமணராசன் பேசும்போது, உலகில் எந்த மொழிக்கு இல்லாத பெருமை நமது தமிழ் மொழிக்கு உள்ளது. நமது முன்னோர்கள் உலகத்திற்கு நாகரீகம் மட்டும் கற்று கொடுக்காமல், தமிழ் இலக்கியத்திற்கும் முன்னுரிமை கொடுத்ததின் மூலம் அழியாத சொத்தை நமக்கு கொடுத்துள்ளனர்.

தமிழர்கள் மொழி உணர்வுடன் வாழ்வதின் மூலம் நமது மொழி, பண்பாடு, கலாசாரம், இலக்கியம் உள்ளிட்டவைகள் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்று நமது புரட்சி கவிஞர் பாரதிதாசனின் கவனாக இருந்தது. அவரின் கவவை நாம் அனைவரும் நனவாக்க வேண்டும். அதன் மூலம் நாம் நமது பண்பாட்டையும் மொழியையும் காக்க வேண்டும். வங்கதேசத்தைப் போல அதற்கு முன்னரே மொழிக்காக போராடிய தமிழர்கள், பாரதிதாசன் பிறந்த நாளை, உலகத் தமிழ் நாளாக கொண்டாட வேண்டும். தமிழர்களின் இந்த கோரிக்கையை உணர்ந்து, மத்திய, மாநில அரசுகள் இந்த நாளை அறிவிக்க முன் வர வேண்டும் என்றார்.

விழாவில் கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி, போரமுரசு கதிரவன், கிள்ளிவளவன், ஆண்டாள் கிள்ளிவளவன், கர்நாடக மாநில அதிமுக முன்னாள் செயலாளர் எஸ்.டி.குமார், கர்நாடக மாநில திமுக முன்னாள் பொறுப்புகுழு உறுப்பினர். ஏ.டி.ஆனந்தராஜ், கவிஞர் மதலைமணி, தங்கவயல் ஆ.கரிகாலவளவன், ராஜசேகரன், கபிலன் உள்பட பலர் நூற்றுகணக்கானோர் கலந்து கொண்டனர். முடிவில் அமுதபாண்டியன் நன்றி கூறினார். பேராசிரியை சுரஸ்வதி நெறியாள்ககை செய்தார்.

முந்தைய கட்டுரைதி பாடி ஷாப் பெங்களூரில் உள்ள மால் ஆஃப் ஏசியாவில் ஒரு புதிய ஆக்டிவிஸ்ட் ஒர்க்ஷாப் ஸ்டோர் தொடக்கம்
அடுத்த கட்டுரை75 வயதான பெண் நோயாளிக்கு மொத்த முழங்கால் மாற்றத்தில் சவால்களை சமாளிக்க வலுவூட்டும் அறுவை சிகிச்சை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்