முகப்பு Politics தமிழர்களின் வளர்ச்சியில் அதிகம் அக்கறை கொண்டிருந்தவ‌ர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி: ந.இராமசாமி

தமிழர்களின் வளர்ச்சியில் அதிகம் அக்கறை கொண்டிருந்தவ‌ர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி: ந.இராமசாமி

0

பெங்களூரு, ஜூன் 3: தமிழ்நாடு மட்டுமின்றி, சர்வதேச அளவில் தமிழர்களின் வளர்ச்சியில் அதிகம் அக்கறை கொண்டிருந்தவ‌ர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி என்று கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தெரிவித்தார்.

பெங்களூரு இராமசந்திரபுரம், மாநில தி.மு.க. கலைஞரக வளாகம், தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் சனிக்கிழமை (ஜூன் 3) முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ந.இராமசாமி பேசியது: முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி தமிழர்களின் தலையாய தலைவர்களின் ஒருவர் என்பதனை யாரும் மறுக்க முடியாது.

எழுத்திலும், பேச்சிலும் சிறந்து விளங்கிய அவர், அவற்றின் மூலம் திராவிடக் கொள்கையை பரப்பியவர். தந்தை பெரியாரின் மாணவராகவும், பேரறிஞர் அண்ணாவின் தம்பியாகவும் விளங்கியவர். திராவிட சிந்தாந்தத்தில் கொள்கை பிடிப்புள்ளவராக திகழ்ந்தவர். சமூகநீதிக்காக, தமிழ்ச் சமுதாய தழைத்தோங்க இரவும் பகலும் பாடுபட்டவர்.

தமிழ்நாட்டில் 5 முறை முதல்வராக பதவி ஏற்று ஆட்சி புரிந்தவர் கலைஞர் மு.கருணாநிதி. ஆட்சியின் போது வரலாறு போன்றும் பல சாதனைகள் புரிந்தவர். மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தியவர். தமிழ்நாடு மட்டுமின்றி, சர்வதேச அளவில் தமிழர்களின் வளர்ச்சியில் அதிகம் அக்கறை கொண்டிருந்தவ‌ர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி.

இப்படி அவரின் புகழைக் கூறிக் கொண்டே செல்லலாம். அவர் இல்லாத வெற்றிடத்தை தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் நிரப்பி வருகிறார். அவரின் கரத்தை தமிழ்நாட்டின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட‌ திமுக நிர்வாகிகள் பலப்படுத்தி வருகின்றனர் என்றார்.

நிகழ்ச்சியில், மாநில திமுக பொருளாளர் தட்சிணாமூர்த்தி, துணைச் செயலாளர் ப.மூர்த்தி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வி.எஸ்.மணி, இலக்கிய அணியைச் சேர்ந்த எம்.ஆர்.பழம்நீ, முருகு தர்மலிங்கம், இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜசேகர், துணை அமைப்பாளர்கள் சி.கண்ணன், எம்.முருகானந்தம், மகளிர் அணியைச் சேர்ந்த ஜே.ஆர்.மங்கம்மா, சற்குணம், ஆர்.சாந்தினி, ராஜேஸ்வரி,

இளைஞர் அணியைச் சேர்ந்த முகமது ஹாரீப், பிரபு, சதீஸ், கோ.கருணாநிதி, உட்லண்ட்ஸ் கணேசன், குமரேசன், மகேஷ்பாபு, தனுஷ்.ஜே, சி.பரசுராமன், சைலேந்திரன், குப்புசாமி, லோகநாதன், சி.ஜெயபால், சாம்ராஜ்பேட்டை நாகராஜ், தமிழ்ச் செல்வன், அன்பழகன், டி.கேசவன், ஜி.குமார், ஜி.லோகநாதன், டி.உத்திரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர், அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அனைவரும் கலைஞர் வாழ்க என குரல் எழுப்பினர்.

முந்தைய கட்டுரைஜேஎஸ்எஸ் (JSS) பாலிடெக்னிக்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான‌ சேர்க்கை தொடக்கம்
அடுத்த கட்டுரைதனிஷ்க் தங்கமாளிகை மல்லேஸ்வரம் மற்றும் எலஹங்காவில் மீண்டும் திறப்பு

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்