முகப்பு Politics தந்தை பெரியாரின் வைக்கம் போராட்ட நினைவுகள்: கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி

தந்தை பெரியாரின் வைக்கம் போராட்ட நினைவுகள்: கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி

0

பெங்களூரு, மார்ச் 31: கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 1924-ம் ஆண்டு, மார்ச் 30 ஆம் தேதியன்று, கேரள மாநிலம் வைக்கத்தில் மாபெரும் சமூக சீர்திருத்தத்திற்கு அடையாளமாக விளங்கும் வைக்கம் போராட்டம் தொடங்கியதன் நூற்றாண்டு தொடக்க நாள் ஆகும். தீண்டாமை ஒழிப்பு புரட்சி, போராட்டத்தை தந்தை பெரியார் தொடங்கிய‌ நாளாகும்.

சமத்துவ சமுதாயம் மலர ஏற்றத்தாழ்வுகள் மக்கள் அனைவரும் சமம் இங்கே யாரும் உயர்ந்தவர் அல்ல தாழ்ந்த வரும் அல்ல என்ற சமூக நீதிக்காக தந்தை பெரியார் வைக்கத்தில் மாபெரும் வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தை தொட‌ங்கி அதில் வெற்றியும் கண்டார்.

அப்பேர்ப்பட்ட புரட்சியாளர் நினைவை நாம் என்றும் மறக்கக்கூடாது. அவர் இந்த சமுயாத்திற்கு செய்த சேவைகளை நினைவில் கொண்டு போற்ற வேண்டும். தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டத்தை நினைவு கூறும் அதே நேரத்தில் அவர் பெங்களூருக்கு அடிக்கடி வந்து மக்களிடம் பகுத்தறிவு கொள்கைகளை பரப்பியதை நினைவு கூறுகிறோம்.

1970 ஆம் ஆண்டு பெங்களூரு ஸ்ரீராமபுரத்திற்கு வந்த தந்தை பெரியார், சிறப்பு பகுத்தறிவு கொள்கைகளை பரப்புரை ஆற்றியதை இன்றும் மறக்க முடியவில்லை. அந்தக் கூட்டத்தில் ந.இராமசாமி ஆகிய நான், பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் பா.இளவழகன், மறைந்த பெரியசாமி மற்றும் பரசுராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டோம் என்று கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தெரிவித்துள்ளார்.

முந்தைய கட்டுரைலெவிஸ் ஆசியாவில் சில்லறை விற்பனை தடயத்தை விரிவுபடுத்துகிறது. பெங்களூரில் பிராந்தியத்தின் மிகப்பெரிய கடைத் திறப்பு
அடுத்த கட்டுரைஉங்கள் வீட்டு வாசலில் சுகாதாரம்: ஐ.எம்.எஸ் அறக்கட்டளை மூலம் வாகனங்களில் சேவை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்