முகப்பு Politics ஜூன் 3-இல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சி

ஜூன் 3-இல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சி

0

பெங்களூரு, மே 30: பெங்களூரில் ஜூன் 3 ஆம் தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இது குறித்து கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பெங்களூரு இராமசந்திரபுரம், மாநில தி.மு.க. கலைஞரக வளாகம், தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் ஜூன் 3 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10.00 மணி அளவில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

விழாவில் திமுக கட்சிக் கொடி ஏற்றி வைத்து, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உருவச் சிலைக்கு மாநில திமுக நிர்வாகிக‌ள், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள், இலக்கிய அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், தொ.மு.ச. பேரவை நிர்வாகிகள் மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்பு வழங்குவார்கள்.

நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். தமிழக அமைச்சர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டங்களின் தேதி பிறகு அறிவிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய கட்டுரைலண்டனில் உள்ள பசவேஸ்வரா சிலைக்கு மாலை அணிவித்தார் ஆதம்ய சேதனா நிறுவனர் தேஜேஸ்வினி அனந்த்குமார்
அடுத்த கட்டுரைவெற்றிகரமாக முடிந்த லாலிகா கால்பந்து பள்ளிகள் மற்றும் எம்டிவி இந்தியா பெங்களூரில் கால்பந்து ஃபீஸ்டா

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்