முகப்பு Uncategorized ஜூனிபர் நெட்வொர்க்ஸ் மற்றும் ஹோப் அறக்கட்டளை சார்பில் 150 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஜூனிபர் நெட்வொர்க்ஸ் மற்றும் ஹோப் அறக்கட்டளை சார்பில் 150 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

0

பெங்களூரு, மார்ச் 14: ஜூனிபர் சென்டர் ஆஃப் ஹோப் சார்பில் மார்ச் 10 ஆம் தேதியன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கே.ஆர்.புரம் காவல் ஆய்வாளர் ரம்யா, ஹோப் அறக்கட்டளையின் மண்டல இயக்குனர் மரியா ஜோசப், மூத்த திட்ட இயக்குந‌ர் மோகன் குமார், கல்லூரி பேராசிரியை ராஜி மற்றும் வெங்கடேஸ்வரா கல்லூரி பேராசிரியர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில், ரம்யா அவர்கள் தனது உத்வேக உரையின் மூலம் பட்டதாரிகளை சொந்தமாக தொழில் தொடங்க ஊக்கப்படுத்தினார். இதில் கைகளால் உருவாக்கப்படும் எம்பிராய்டரி, தையல் மற்றும் அடிப்படை கணினி பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்ற 150 பேர் கெளரவ விருந்தினர்களிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றனர். இதனால் நிகழ்ச்சி பகுதி முழுவதும் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருந்தது.

ஹோப் (HOPE) அறக்கட்டளை பற்றி: ஹோப் அறக்கட்டளை குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய நபர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வர செயல்படுகிறது. நாங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கிறோம். நாங்கள் சுகாதாரத்தை வழங்குகிறோம். குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு பாதுகாப்பான இல்லத்தை வழங்குகிறோம். வாழ்வாதாரத்திற்காக இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். அதன்பிறகு, அவர்களுக்கு வேலை தேடவும். சொந்தத் தொழில் தொடங்கவும் உதவுகிறோம்.


500 க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் பல தன்னார்வலர்கள் மற்றும் கூட்டாளர்களைக் கொண்ட குழுவால் இயக்கப்படுகிறது. எங்கள் பணி இந்தியாவில் 19 நகரங்களில் பரவியுள்ளது. யாரும் இல்லாதவர்களுக்கு நம்பிக்கையைத் தருவதும், எங்கள் ஊழியர்கள், நன்கொடையாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் கூட்டாளிகள் உட்பட நாங்கள் பணிபுரியும் அனைவரின் வாழ்க்கையையும் மாற்றுவதும் எங்கள் நோக்கம். ஒவ்வொரு ஆண்டும், எங்கள் பணியின் மூலம், 50,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களின் வாழ்க்கைக்கு ஹோப் ஆதரவாக உள்ளது.

முந்தைய கட்டுரைபெங்களூரில் மார்ச் 16 இல் உடல் உறுப்புதானம் குறித்த விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி: நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, டாக்டர் தேவிஷெட்டி உள்ளிட்டோர் பங்கேற்பு
அடுத்த கட்டுரைபெங்களூரு லூலு மாலில் சினிபோலிஸ் திரையரங்கம் புதிதாக திறப்பு

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்