முகப்பு Politics சமுதாயத்தை சீர்திருத்த வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட கட்சி திமுக: ந.இராமசாமி

சமுதாயத்தை சீர்திருத்த வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட கட்சி திமுக: ந.இராமசாமி

0

பெங்களூரு, ஆக. 13: சமுதாயத்தை சீர்திருத்த வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட கட்சி திமுக என்று அக்கட்சியின் மாநில அமைப்பாளர் ந.இராமசாமி தெரிவித்தார்.


பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை அவர் தனது 88 வது பிறந்த நாளை கொண்டாடினர். அவருக்கு திமுக கட்சியின் நிர்வாகிகள், பொதுமக்கள், அவரது உறவினர்கள், ஊடகத்துறையினர் சால்வை, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் தமிழ் நூல்களை பரிசாக வழங்கினார். பின்னர். பின்னர் ஏற்புரையில் அவர் பேசியது: திமுக கட்சி தனிநபர்களுக்காக, பதவிக்காக‌ தொடங்கப்பட்ட கட்சி அல்ல. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி திமுக. அதே போல் சமுதாயத்தை சீர்திருத்த வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட கட்சி திமுக என்பதனை யாரும் மறந்துவிடக்கூடாது.

கட்சிக்காக யார் உழைக்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்கள் தங்களின் உடல் நலனை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அண்ணா தனது உடல் நலனை பாதுகாக்க தவறியதன் விளைவாக, அவரை நாம் இழக்க நேரிட்டது. கலைஞர் தனது உடல் நலனில் கவனம் செலுத்தினார். அதே போல் தந்தை பெரியாரும் உடல் நலனில் அக்கறை கொண்டதால், அவர் நீண்ட காலம் வாழ்ந்து இந்த சமுதாயத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டார். அதே போல கர்நாடக மாநிலத்தில் உள்ள திமுகவினர் தங்களின் உடல் நலனை பாதுகாத்து கொண்டு, கட்சியின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும்.

1959 ஆம் ஆண்டு கர்நாடகத்தில் திமுக இயக்கதை தொடங்கிய போது, அதற்கு தலைமை ஏற்க யாரும் முன் வரவில்லை. இதன் காரணமாக அப்போது துடிப்போடு செயல்பட்ட ஒருவரை அடையாளம் கண்டு அவரை கட்சிக்கு செயலாளராக நியமித்தோம். அதன் பிறகு சேரன், சோழன், பாண்டியன் ஆகியோரை அடையாளம் கண்டு, கட்சியின் மாநிலத் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகள் நியமிக்கப்பட்டனர். ஆரம்பக் காலத்தில் கட்சி பல சங்கடங்களை சந்தித்தது. அதன் பிறகு பலர் கொள்கை பிடிப்போது பணியாற்றியதால், கட்சி வளர்ச்சி பெற்றது.

ஆரம்பக்காலத்திலிருந்து கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டதன் விளைவாக நான் தற்போது, மாநில அமைப்பாளராக பதவி வகித்து வருகிறேன். அதே போல இளைஞர்களும் ஈடுபாட்டோடு கட்சியில் பணியாற்றினால், அவர்களை பதவி தானாக தேடி வரும். எனவே அனைவரும் கடந்த கால கசப்புகளை மறந்து, ஒன்றிணைந்து திமுகவை வளர்க்க பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

முந்தைய கட்டுரைபிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் பெங்களூரு மெகா சுகாதார முகாம்
அடுத்த கட்டுரைஇந்திய உற்பத்தித் துறையில் புரட்சி செய்ய போஸ்போல் முடிவு

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்