முகப்பு Temple கிருஷ்ணபகவான், ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயிலில் பிரதிஷ்டாபன அஷ்டபந்தன கும்பாபிஷேகம்

கிருஷ்ணபகவான், ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயிலில் பிரதிஷ்டாபன அஷ்டபந்தன கும்பாபிஷேகம்

0

பெங்களூரு, மே 19: பெங்களூரு சிவாஜிநகர் ஓல்டு மார்கெட் சாலையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணபகவான், ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயிலில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்ரமண்யர், ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ தர்மராஜா, ஸ்ரீ போத்தராஜா பிரதிஷ்ட அஷ்டபந்தன கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

சுபஸ்ரீ நிகழும் மங்களகரமான குரோதி வருஷம் வைகாசி மாதம் 6ஆம் நாள் (19.05.2024) ஞாயிற்றுக்கிழமை சுக்ல பக்ஷம் ஏகாதசி திதி, ஹஸ்தம் நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 8.15 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் சிவாஜிநகர் ஓல்டு மார்கெட் சாலையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணபகவான், ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயிலில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்ரமண்யர், ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ கிருஷ்ணபகவான் பிரதிஷ்ட அஷ்டபந்தன கும்பாபிஷேகம் சிறப்புடன் நடைபெற்றது.

இதில் ஸ்ரீ முத்தியாலம்மன் தேவி திருக்கோவில் தலைமை குருக்கள் பிரம்மஸ்ரீ டாக்டர் R. சுப்பிரமணி, ஸ்ரீ கரிமலைவாசன் ஐய‌ப்பா சேவா சங்கம் தலைவர் அருட்செல்வர் இரா. சுகுமாறன் குருசாமி, காதம்பரண்யா ஆசரமத்தின் இளம் துறவி ஆன்மீக செம்மல் ஸ்ரீ கிருஷ்ணால்வார் சுவாமிகள், பெங்களூரு ஸ்ரீ வெள்ளேரி அம்மன் திருக்கோவில் பிரதான குருக்கள் ஸ்ரீ தியாகராஜ சிவாச்சாரியார், திருக்கடையூர் ஸ்ரீ மகேஷ் சிவாச்சாரியார், கோயிலின் செயலாளர் வா.ஸ்ரீதரன் சுவாமிகள், துணைத் தலைவர் கோபிநாத், பொருளாளர் விஜயசாரதி, இணைச் செயலாளர் அனந்தகிருஷ்ணன், ஆலோசகர் நந்தகுமார், உரிமைக்குரல் எம்.ஜி.ஆர் ரவி, கன்னட கண்மணி எம்.ஜி.ஆர் ரவி, காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பைப்பனஹள்ளி ரவி, கோவில் நிர்வாகிகள், ஸ்ரீ திரௌபதி அம்மன் தீ மிதிக்கும் குமாரமக்கள் குழுவினர் உள்ளிட்ட‌ திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் கும்பாபிஷேகம் மற்றும் மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. ஸ்ரீ கிருஷ்ண பகவான், ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் மற்றும் திரௌபதி அம்மன் தீ மிதிக்கும் குமாரமக்கள் குழு இணைந்து நடத்தும் 53வது ஆண்டு ஸ்ரீ திரௌபதி அம்மன் தீமிதி திருவிழா வரும் ஜூன் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.05 மணிக்கு ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

முந்தைய கட்டுரைஇந்தியாவில் உள்ள அடுக்கு 2 மற்றும் 3 நகரங்களில் 3% பெண் தொழில் முனைவோருக்கு மட்டுமே வெளிப்புற நிதியுதவி கிடைக்கும்: ஆர்பிஐஎச்-சால்டு அறிக்கை எப்ஐசிசிஐ லேடீஸ் ஆர்கனைசேஷனால் வெளியீடு
அடுத்த கட்டுரைஅல்டியம் இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் மேம்பாடு மற்றும் கல்வியில் அதன் முதலீட்டை விரிவுபடுத்துகிறது

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்