முகப்பு Politics கர்நாடக மாநில திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு

கர்நாடக மாநில திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு

0

பெங்களூரு, ஜன. 25: கர்நாடக மாநில திமுக சார்பில் பெங்களூர் ராமச்சந்திரபுரத்தில் உள்ள கர்நாடக மாநில திமுக கலைஞரக வளாகம், தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதில் மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தலைமையில் திமுகவினர், மொழிப்போர் தியாகிகள் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ந. இராமசாமி பேசியது: 1937 இல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தப்போது ராஜாஜி இந்தி படிப்பதை மேல்நிலைக் கல்வியில் கட்டாயம் ஆக்கினார். பெரியார் கொதித்து எழுந்து சுயமரியாதை இயக்கத்தின் மூலமும், நீதிக்கட்சியின் மூலமும் போராட்டங்கள் நடத்தினார்.

இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை தமிழுக்கு பதிலாக திணிக்க பார்க்கிறார்கள் என்கிற எண்ணம் வலுப்பெற்று தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் நடராசன் என்ற இளைஞர் சிறைக்கொடுமையின் காரணமாக உயிர் நீத்தார்.

அவரையடுத்து தாளமுத்து உள்ளிட்டோர் மொழிக்காக தங்கள் உயிரை தியாகம் செய்தனர். அவர்களை நாம் ஒரு போதும் மறக்கக்கூடாது. அவர்களின் தியாகத்தை நாம் கௌரவிக்க வேண்டும் என்றார்.

நிகழ்வில் வி.எஸ்.மணி, ஏ.டி. ஆனந்தராஜ், முருகானந்தம், ராஜசேகர், இ.கேசவன், டி.உத்தர குமார், கே.எஸ் சுந்தரேசன், ஆற்காடு அன்பழகன், உட்லண்ட்ஸ் கணேசன், எம்.ஆர். பழநீ, ஜி லோகநாதன், ஆர்.கரிகாலன், மகேஷ் பாபு, தனுஷ், மங்கம்மா, முருகமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முந்தைய கட்டுரைபெலனஸ் சாம்பியன்ஸ் மருத்துவமனை, மிலன் கருத்தரிப்பு நிபுணர்களுடன் இணைந்து “கருவுறுதல் மற்றும் ஆண்ட்ரோலஜி கிளினிக்” தொடக்கம்
அடுத்த கட்டுரைஐஇஎஸ்ஏ (IESA) இந்தியாவில் செமிகன்டக்டர் மற்றும் இஎஸ்டிஎம் கொள்கைகள் பற்றிய விரிவான அறிக்கை வெளியீடு

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்