முகப்பு Politics கர்நாடக திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு

கர்நாடக திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு

0

பெங்களூர், ஜன. 20: கர்நாடக மாநில திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் ஜன. 25 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. தாய் தமிழ் மொழி காக்க தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த இந்த தியாகிகள் நினைவு கூறப்படுகின்றனர். 25 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9.30 மணி அளவில் பெங்களூர் ராமச்சந்திரபுரத்தில் உள்ள கர்நாடக மாநில திமுக கலைஞரக வளாகம், தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மொழிப்போர் தியாகிகள் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. கர்நாடக மாநில திமுக நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள்,
தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள், திமுக இளைஞரணி நிர்வாகிகள், திமுக இலக்கிய அணி
நிர்வாகிகள், திமுக மகளிர் அணிய நிர்வாகிகள், தொமுச பேரவை நிர்வாகிகள் மற்றும் கிளை கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்துகின்றனர்.

மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வில் திமுகவினர், தமிழ் ஆர்வலர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கர்நாடக மாநிலத் திமுக
அமைப்பாளர் ந.ராமசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

முந்தைய கட்டுரைபெலனஸ் சாம்பியன் மருத்துவமனை இலவச இரண்டாம் கருத்து ஓபிடி சேவைகளுடன் “ஜிஐ ஆன்காலஜி கிளினிக்” திறப்பு
அடுத்த கட்டுரைபெங்களூரில் பரிமேட்ச் ஸ்போர்ட்ஸ் மூலம் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், ரசிகர்களுடன் சந்திப்பு

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்