முகப்பு Politics கர்நாடக திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்

கர்நாடக திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்

0

பெங்களூரு, ஜன. 25: கர்நாடக திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

பெங்களூரு ஸ்ரீராமபுரம் ராமசந்திரபுரத்தில் உள்ள மாநில திமுக தலைமைக் கழக அலுவலகம் கலைஞரகம் தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் புதன்கிழமை கர்நாடக திமுக சார்பில் மொழிப் போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மொழிப் போர் தியாகிகள் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி, அவைத் தலைவர் மொ.பெரியசாமி, பொருளாளர் கே.தட்சிணாமூர்த்தி, துணைத் தலைவர் ஜி.ராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் எம்.இராமன், கிளைக்கழகச் செயலாளர் செ.தமிழ்ச் செல்வன், துணைச் செயலாளர் ஏழுமலை, ஆற்காடு அன்பழகன், உட்லண்ஸ் கணேசன், ஆர்.டி.மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முந்தைய கட்டுரைஜன. 28 இல் நெக்ஸஸ் சாந்திநிகேதன் மாலில் அமித் டாண்டனின் நிகழ்ச்சி
அடுத்த கட்டுரைமருத்துவச் சுற்றுலாவிற்கு தென் இந்தியா சிறந்து விளங்குகிறது: மத்திய இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்