Bangalore Dinamani

கர்நாடக திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்

பெங்களூரு, ஜன. 25: கர்நாடக திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

பெங்களூரு ஸ்ரீராமபுரம் ராமசந்திரபுரத்தில் உள்ள மாநில திமுக தலைமைக் கழக அலுவலகம் கலைஞரகம் தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் புதன்கிழமை கர்நாடக திமுக சார்பில் மொழிப் போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மொழிப் போர் தியாகிகள் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி, அவைத் தலைவர் மொ.பெரியசாமி, பொருளாளர் கே.தட்சிணாமூர்த்தி, துணைத் தலைவர் ஜி.ராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் எம்.இராமன், கிளைக்கழகச் செயலாளர் செ.தமிழ்ச் செல்வன், துணைச் செயலாளர் ஏழுமலை, ஆற்காடு அன்பழகன், உட்லண்ஸ் கணேசன், ஆர்.டி.மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version