முகப்பு Politics கர்நாடக திமுக சார்பில் அமைச்சர் தினேஷ் குண்டுராவிற்கு பிறந்த நாள் வாழ்த்து

கர்நாடக திமுக சார்பில் அமைச்சர் தினேஷ் குண்டுராவிற்கு பிறந்த நாள் வாழ்த்து

0

பெங்களூரு, அக். 10: கர்நாடக திமுக சார்பில் மாநில அமைப்பாளர் ந.இராமசாமி, கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவிற்கு சால்வை, மாலை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதல்வராக டி.கே.சிவகுமார் பதவி வகித்து வருகிறார். அமைச்சரவையில் தினேஷ் குண்டுராவ், சுகாதாரத்துறை அமைச்சராக உள்ளார்.

அக். 9 ஆம் தேதி இவரது 55 வது பிறந்த நாள். இதனை காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் வெகு விமரிசையாக கொண்டாடினர். பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது தினேஷ் குண்டுராவை கர்நாடக திமுக சார்பில் சந்தித்த அதன் அமைப்பாளர் ந.இராமசாமி, அவருக்கு சால்வை, மாலை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார்.

ந‌.இராமசாமிக்கு, அமைச்சர் தினேஷ்குண்டுராவ் நன்றி தெரிவித்து, திமுக சார்பில் நடைபெறும் அனைத்து வளர்ச்சிப்பணிகள், சமூகப் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மாநில திமுகவிற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் கூறினார்.

முந்தைய கட்டுரைபெங்களூரில் மெலோராவின் 27வது கடை திறப்பு
அடுத்த கட்டுரைஸ்ரீ சைதன்யாவின் இன்ஃபினிட்டி லீம் மூலம் கட்டமைக்கப்பட்ட கல்வி வழங்கும் திட்டம்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்