முகப்பு Special Story ஆர்க்கிட்ஸ் தி இண்டர்நேஷனல் பள்ளி சென்னையில் ‘இமேஜின் ஹப்’ எனும் தலைப்பில் மாணவர்களுக்கான கற்றல் அனுபவம்...

ஆர்க்கிட்ஸ் தி இண்டர்நேஷனல் பள்ளி சென்னையில் ‘இமேஜின் ஹப்’ எனும் தலைப்பில் மாணவர்களுக்கான கற்றல் அனுபவம் அறிமுகம்

0

சென்னை, பிப். 11: ஆர்க்கிட்ஸ் தி இண்டர்நேஷனல் பள்ளி, முன்னணி இன்டர்நேஷனல் கே12 பள்ளிச் சங்கிலிகளில் ஒன்றாகும். இது முற்போக்கான கற்பித்தலுக்கான புதுமையான முயற்சிகளுக்காக நன்கு அறியப்பட்டது. இந்தப் பள்ளி சென்னையில் புதுமையான இமேஜின் ஹப் -ஐத் தொடங்கியுள்ளது.

இந்த அதிநவீன – ஆய்வுக் கூடங்கள் புகழ் பெற்ற தந்தை- மகள் நடன இயக்குனர்களான ஸ்ரீதர் மாஸ்டர்- அக்ஷதா ஸ்ரீதர், இந்திய ஒளிப்பதிவாளர்-வித்து அய்யன்னா, ஷபீக் முகமது அலி, படத்தொகுப்பாளர் ஐசிசிஆர் சென்னையின் முன்னாள் மண்டல இயக்குனர்‍ கே.முகமது இப்ராஹிம் கலீல், இன்ஃபுளூயன்சர் மற்றும் பதிவர் – முகமது இர்ஃபான், கல்வியாளர்-ஆர்க்கிட்ஸ் – மஞ்சுளா, ஆர்க்கிட்ஸ் தி இண்டர்நேஷனல் பள்ளி, பெரும்பாக்கம் வளாகத்தின் முதல்வர் – லாவண்யா டி மற்றும் சிவகுமார், மண்டலத் தலைவர்- சென்னை, ஆர்க்கிட்ஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பெரும்பாக்கம் வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இமேஜின் ஹப் ஆய்வகம் வானியல், ரோபாட்டிக்ஸ், மாக் கோடிங், டிங்கரிங் (தன்னாற்றல் சுயகல்வி), நடனம், நாடகம், இசை, நெசவு மற்றும் அச்சிடுதல், மட்பாண்டங்கள் மற்றும் ஓவியம் வரைதல் முதலியவற்றைக் கொண்டுள்ளது. ஆர்க்கிட்ஸ் பள்ளிக்கரணை வளாகத்திலும் இந்த ஆய்வகக் கூடங்கள் அமையப் பெற்றுள்ளன. இமேஜின் ஹப் ஆய்வகங்கள் ஹோம்லேன், ஒரு புதுமையான இன்டீரியர் டிசைன் நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ளன, இது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, விசாலமான ஆதி முதல் அந்தம் வரையிலான உட்புற வடிவமைப்புத் தீர்வுகளை அளிக்கிறது.

தொடக்க விழா குறித்து தந்தை- மகள் நடன இயக்குனர்களான ஸ்ரீதர் மாஸ்டர்- அக்ஷதா ஸ்ரீதர் தெரிவிக்கையில், “நடனம் என்பது நடன அசைவுகளின் மூலம் ஆரோக்கியமான உணர்ச்சி வடிவத்தை வெளிக்காட்ட உதவுவதோடு மட்டும் இல்லாமல், சிறந்த மற்றும் அனைத்து மோட்டார் திறன்கள் பின்னர், மனம்- உடல் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் வளர்த்துப் பராமரிக்கிறது என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இமேஜின் ஹப்பை தொடங்கியதன் மூலம் ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளி காட்டும் கலை வளர்ப்புக்கான அர்ப்பணிப்பு எனது சொந்த ஆர்வத்தைப் பிரதிபலிக்கிறது – பள்ளியின் இந்த அர்ப்பணிப்பு, ஒவ்வொரு மாணவரிடமும் படைப்பாற்றல் நெருப்பை உண்டாக்கி வெற்றிபெற வேண்டும்” என்றனர்.

ஆய்வகத் துவக்கவிழாவில் பேசிய ஆர்க்கிட்ஸ், விபி கல்வியாளர் மஞ்சுளா பி, “இமேஜின் ஹப் ஆய்வகக் கூடங்கள் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 மற்றும் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCF) 2023 ஆகியவற்றுடன், அனுபவக் கற்றல் மற்றும் STEM ஒருங்கிணைப்பைப் பெரிதும் வலியுறுத்துகின்றன. ஆய்வக அடிப்படையிலான கல்வி, நடைமுறை- செயலியல் அனுபவங்கள் மற்றும் பரிசோதனைகளை அளித்து, செயலற்ற கற்றல் நிலை மாணவர்களை செயல்படும் பங்கேற்பாளர்களாக மாற்ற உதவுகிறது. சோதனைகளை நடத்துதல், தரவை பகுப்பாய்வு செய்தல் மற்றும் முடிவுகளை எடுத்தல் போன்ற செயல்பாடுகளில் மாணவர்களைத் தீவிரமாக ஈடுபடுத்துவதன் மூலம், இந்த அணுகுமுறை அவர்களிடையே விமர்சன சிந்தனை, சிக்கலைத் தீர்க்கும் திறன் மற்றும் படைப்பாற்றலை வளர்க்கிறது. கற்றல் அறிவைத் திறம்பட பயன்படுத்தத் தேவையான உபகரணங்களை மாணவர்களை சித்தப்படுத்துவதற்காக இந்த ஆய்வக மையங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இது எங்களது மாணவர்கள் அவர்களின் உண்மையான திறன்களை அடைய உதவுவதோடு மட்டும் இல்லாமல், 2047 -ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் இலக்கான ‘விக்சித் பாரத்’ ஆக மாறுவதற்கு எங்களுடைய பங்களிப்பை அளிக்கவும் உதவும்” என்றார்.

ஆர்க்கிட்ஸ் தி இண்டர்நேஷனல் பள்ளி, பெரும்பாக்கம் வளாகத்தின் முதல்வர் – லாவண்யா டி கூறிய‌தாவது, “ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளியின் பாடத் திட்டத்தில் ஸ்டெம், விளையாட்டு, தொழில்நுட்பம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கற்றல் அனுபவங்கள் தடையின்றி ஒருங்கிணைந்து அமைந்துள்ளன. விரிவான திறன் தொகுப்பின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், மேற்கூறிய இந்தத் துறைகளில் மாணவர்களுக்கு நேரடி வாய்ப்புகளை வழங்குவதற்காக ஏற்புடையத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்த இமேஜின் ஹப் ஆய்வகக் கூடங்கள் தகவமைப்புத் தன்மைக்கான பயிற்சிக் களமாகச் செயல்படும், இங்கு மாணவர்கள் கோடிங், டிஐஒய் மற்றும் புதுமையான விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். உயிர் வாழ்வதற்கான திறன்களை வளர்த்துக் கொள்வதோடு மட்டும் இல்லாமல், இந்த ஆற்றல் மிக்க உலகில் ஒவ்வொரு நாளும் வாழ்வின் விதிகளை மாற்றி எழுதி செழிக்கத் தேவையான திறன்களையும் பெறலாம்” என்றார்.

இமேஜின் ஹப்பின் படைப்பாக்கம் மற்றும் செயல்படுத்துதல், மாணவர்களிடையே பல்வேறுபட்ட – நல்ல திறன்களை வளர்ப்பதில் இருக்கும் ஆர்க்கிட்ஸின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கல்விசார் சிறப்பான செயல்பாடுகளுக்கு அப்பால், விளையாட்டு, படைப்பாற்றல் வெளிப்பாடு, எதிர்காலக் கலை முயற்சிகள் மற்றும் அத்தியாவசியமான வாழ்க்கைத் திறன்களான கோடிங் மற்றும் ரோபாட்டிக்ஸ் போன்ற பல்வேறு களங்களுக்கான பரந்த தயார் நிலையை வளர்ப்பதே இப்பள்ளியின் நோக்கம் ஆகும்.

முந்தைய கட்டுரைஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 88வது நிறுவன தினக் கொண்டாட்டம்
அடுத்த கட்டுரைஜெயநகர் 4வது பிளாக்கில் அடுகலேவின் ஃபிளாக்ஷிப் ஸ்டோர் மற்றும் பழைய பெங்களூர் கஃபே திறப்பு

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்