முகப்பு Education ஆங்கிலத்தால் மட்டுமே சிறக்க முடியும் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்: மத்திய அமைச்சர் பிரலாத்ஜோஷி

ஆங்கிலத்தால் மட்டுமே சிறக்க முடியும் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்: மத்திய அமைச்சர் பிரலாத்ஜோஷி

0

பெங்களூரு, டிச. 23: கல்வியாளர்களிடத்தில் ஆங்கிலம் தெரிந்தால் மட்டுமே சிறக்க முடியும் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரலாத்ஜோஷி தெரிவித்தார்.

பெங்களூரில் 2வது நாளாக நடைபெற்ற இந்திய உயர்க்கல்வித்துறையை உலக அளவில் போட்டியாக இந்திய உயர்க்கல்வியை மாற்றுவது என்ற தலைப்பிலான மாநாட்டின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு பேசினார். மேலும் அவர் பேசியது: 20 வது நூற்றாண்டிற்கு முன்பு உலகிற்கு இங்கிலாந்து தலைமை வகித்தது. 20 வது நூற்றாண்டிற்கு அமெரிக்கா தலைமை வகித்தது. 21 வது நூற்றாண்டிற்கு இந்தியா தலைமை வகிக்கும். அதற்கான பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும் இந்தியா பெற்று வருகிறது.

ஆங்கிலம் கற்றால்தான் உலக அளவில் சிறக்க முடியும் என்ற எண்ணத்தை கல்வியாளர்கள் கொண்டுள்ளனர். அவர்களின் எண்ணத்தை மாற்ற வேண்டும். பழங்காலத்தில் இந்தியாவில் ஆங்கிலம் இல்லாத பல்வேறு மொழிகள் புழக்கத்தில் இருந்தன. அப்போதிருந்த பல்கலைக்கழங்களான தக்ஷ்ஷீலா, நலந்தா உள்ளிட்டவை பல்கலைக்கழங்களில் சிறந்து விளங்கின. ஆங்கிலம் அல்லாமலேயே நாம் அறிவியல், கணிதம் உள்ளிட்டவைகளில் சிறந்து விளங்கினோம்.

உலகம் உருண்டையா, தட்டையா என்ற விவாதம் மேற்கத்திய நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருந்தப்போது, பூகோளம் என்று நான் கூறி வந்தோம். பூ என்றால் பூமி, கோளம் என்றால் உருண்டை என்பதனை நமது முன்னோர்கள் முன்பே அறிந்திருந்தனர். ஆங்கிலம் அறிந்தவர்களுக்கு மட்டுமே திறன் உள்ளது என்பதனை ஏற்றுக் கொள்ளமுடியாது. ஆங்கிலம் தெரியாமல் இந்திய மொழிகளை அறிந்த பலர் தொழில்திறனால் எட்டமுடியாத உயரத்திற்கு சென்றுள்ளனர். இதனை உணர்ந்து கல்வியாளர்கள், உயர்கல்வியில் மாணவர்களுக்கு தொழில் திறனை கற்பித்து, ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

மேலும் அண்மைக்காலமாக இந்தியாவின் நிலைமை மாறி வருகிறது. விரைவில் இந்தியா பொருளாதாரத்தில் 3 வது இடத்தை பிடிக்கும். அதனைத் தொடர்ந்து முதல் இடத்தை பிடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். 2014 லில் 51 ஆயிரமாக இருந்த மருத்துக் கல்லூரிகள் தற்போது, 1.5 லட்சமாக உயர்ந்துள்ளது. அதே போல உயர்கல்வியில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்கள் பல சலுகைகள், வேலை வாய்ப்பையும் அடைய முடியும்.

எனவே அரசும், உயர்கல்வி நிறுவனங்களும் இணைந்து பணியாற்ற வேண்டும். இந்த மாநாட்டில் மூலம் நீங்கள் அளிக்கும் அனைத்து பரிந்துரைகளையும், மத்திய அரசு திறந்த மனதுடன் பரிசீலிக்கும் என்றார். நிகழ்ச்சியில் மாநில மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் சரண்பிரகாஷ் பாட்டீல், இந்தியாவுக்கான கல்வி ஊக்குவிப்பு சங்கத்தின் தலைவர் எம்.ஆர்.ஜெயராம், முன்னாள் தலைவர் ஜி.விஸ்வநாதன், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் தலைவர் டி.ஜி.சீதாராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முந்தைய கட்டுரைபெங்களூரில் வைகுண்ட ஏகாதசியொட்டி விஷ்ணு கோவில்களில் சிறப்பு வழிபாடு
அடுத்த கட்டுரைஎலும்பியல் சிகிச்சையில் புரட்சி: பெலனஸ் சாம்பியன்ஸ் மருத்துவமனையின் “முழங்கால் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை கிளினிக்” அறிமுகம்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்