முகப்பு Education 5-ஆம் ஆண்டு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) பயிற்சிக்கு விண்ணப்பிக்க‌ அழைப்பு

5-ஆம் ஆண்டு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) பயிற்சிக்கு விண்ணப்பிக்க‌ அழைப்பு

0

பெங்களூரு, ஜூன் 16: 5-ஆம் ஆண்டு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வாசவி அகாடமி அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து வெள்ளிக்கிழமை கர்நாடக ஆர்ய வைஷிய மஹாசபையின் தலைவர் ரவிசங்கர் செய்தியாளர்களிடம் கூறியது: வாசவி அகாடமி என்பது 1908 ஆம் ஆண்டு முதல் கர்நாடக ஆர்ய வைஷ்ய மகாசபையின் மூலம் இயங்கும் ஒரு சேவை அமைப்பாகும். இது கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகத் துறைகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களின் மேம்பாட்டிற்காக பணியாற்றுவதன் மூலம் சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக 1908 முதல் இயங்கி வருகிறது.

பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகளை அதாவது, ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்களுக்கு எங்கள் அகாடமி மூலம் சிறந்த பயிற்சி, வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க அழைக்க‌ப்படுகிறார்கள். வாசவி அகாடமி நடத்தும் நுழைவுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறும் முதல் 25 மாணவர்களுக்கு கல்வி, தங்கும் விடுதி மற்றும் தேவைப்படும் வசதிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். மீதமுள்ள மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் கட்டணமாக வழங்க வேண்டும். விண்ணப்பிக்க ஏதேனும் பட்டம் பெற்ற மாணவர்கள் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

வாசவி அகாடமியின் 5-வது தொகுப்பில் மிகவும் மூத்த, அனுபவம் வாய்ந்த மற்றும் நிபுணத்துவ பெற்றவர்கள், விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கு நிகழாண்டு ஜூலை 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நுழைவுத் தேர்வை நடத்துவார்கள், அதைத் தொடர்ந்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு அதே நாளில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 25/06/2023 ஆகும். விவரங்களுக்கு தொலைபேசி எண்: 8073499217 அல்லது வாசவி அகாடமியின் இணையதளச்சேவை https://vasaviacademy.Com ல் அணுக வேண்டும் என்றார்.

முந்தைய கட்டுரைதேசிய வங்கியில் கடன் வாங்கியதால், பெரும் பிரச்னையில் சிக்கி தவிக்கிறேன்: டாக்டர் ஷியாமளாரெட்டி
அடுத்த கட்டுரைபொது வாழ்க்கையைப் பாதுகாக்கவும், அமைதியான சமுதாயத்தை உருவாக்கவும் சிசி கேமராவின் பங்களிப்பு அதிகம்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்