முகப்பு Temple ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சித்தேஷ்வர் கோவிலில் மார்ச் 8 சிவராத்திரி சிறப்பு பூஜை மற்றும் சிடி...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சித்தேஷ்வர் கோவிலில் மார்ச் 8 சிவராத்திரி சிறப்பு பூஜை மற்றும் சிடி வெளியீடு

0

பெங்களூரு, பிப். 27: பெங்களூரு மாவட்டம், ஆனேக்கல் தாலுகா, 80 அடி டி.வி.எஸ் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சித்தேஷ்வர் கோயிலில் மார்ச் 8-ஆம் தேதி சிவராத்திரிய‌ன்று இரவு 7 மணி முதல் சிறப்பு பூஜை மற்றும் பக்தி பாடல் சிடி வெளியிடப்படும் என்று கோயில் மூத்த அறங்காவலர் எம். ராஜசேகர் தெரிவித்தார்.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சித்தேஷ்வரர் ஆலயம் மேற்கண்ட முகவரியில் ஏறக்குறைய பல வருடங்களாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறது.இந்த கோவிலுக்கு கர்நாடக மாநிலம், சிக்கமங்களூரு மாவட்டம், தரிகெரே தாலுக்கா, லக்கவல்லி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரி திரு. எம்.ராஜசேகர் பி.காம் கோவிலின் நிர்வாக அறங்காவலராக இருந்து வருகிறார். அறங்காவலர் ராஜசேகர் சிவபெருமானின் தீவிர பக்தர். கோயிலின் நிர்வாகத்தை இவர் தனித்துவமாக நடத்தி வருகிறார்.

மேற்படி ஆலயத்தின் நிர்வாக அறங்காவலர்கள் ராஜசேகர் மற்றும் அவரது மனைவி திருமதி எஸ். ரஞ்சனி அம்மாள் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் பகுதியில் உள்ள ஸ்ரீ பிரக‌தீஸ்வரர் கோவிலின் தீவிர பக்தர்கள் ஆவர். மேலும் கோயிலின் சடங்கு, சம்பிரதாயங்களில் ஈர்க்கப்பட்டு, அந்தகோவிலைப் போன்ற வடிவத்தில் இந்த கோவிலையும் கட்டினர்.

இந்த கோவிலுக்கு முன்னாள் பிரதமர் மற்றும் சிவபெருமானின் சிறந்த பக்தரான திரு.எச்.டி.தேவகவுடா குடும்பத்தினருக்குச் சொந்தமான சுமார் ஆறரை ஏக்கர் நிலத்தை வாங்கிக் இந்த கோயில் கட்டப்பட்டது. முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா குடும்பத்தினருடன் வந்து, இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தை முறைப்படி பயன்படுத்தி கோவிலின் நிர்வாக அறங்காவலர் ஆனார்கள்.

திரு.எம்.ராஜசேகர் மற்றும் அவரது அம்மன் திருமதி எஸ். ரஞ்சனி அம்மாள் சுமார் ரூ. 30 கோடி ரூபாய் செலவில் இந்திய கலாசாரம் மற்றும் சிற்பக்கலையை பயன்படுத்தி இந்த அழகிய கோவிலைக் கட்டி உள்ளனர். அதன் விளைவாக‌ இன்று கோவில் கட்டுமானத்தில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதுதவிர, 63 அடி உயர ராஜகோபுரம் கட்டும் பணியும் இறுதி கட்டத்தில் உள்ளது.

பெயரும் புகழும் பெற்றுள்ள இந்தக் கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சித்தேஷ்வர் சுவாமியை தரிசனம் செய்யவும், அருள் பெறவும் வருகின்றனர். குறிப்பாக திங்கட்கிழமைகளில் சுமார் 10,000 பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் சிவராத்திரி சிறப்பு தரிசனத்திற்காக 50,000 முதல் 60,000 பக்தர்கள் இங்கு வந்து சித்தேஷ்வர் சுவாமியின் தரிசனமும், அருளையும் பெற்றுச் செல்கின்றனர்.

மேற்படி ஆலயத்தின் நிர்வாக அறங்காவலர்கள் திரு.எம்.ராஜசேகர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தனது சொந்த பணத்தை செலவு செய்து உணவுப் பிரசாதம் வழங்குகிறார். அவரது சிறப்பு கவனிப்பால் மனம் கவர்ந்த‌ பக்தர்கள், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சித்தேஸ்வர் சுவாமியை தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் கோவிலுக்குத் திரளாக‌ வருகின்றனர்.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சித்தேஸ்வர ஸ்வாமி அவர்களின் அருளால் இனிவரும் நாட்களில் திரு.எம். ராஜசேகர் கோவிலின் கும்பாபிஷேகத்தை நடத்த திட்டமிட்டுள்ளார். பக்தர்கள் அதிக அளவில் கோயிலுக்குச் வந்து ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சித்தேஷ்வர சுவாமியை தரிசனம் செய்து அருளைப் பெறலாம்.

சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 8 ஆம் தேதி மாலை 7 மணி முதல் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சித்தேஷ்வர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் பக்திப்பாடல் சிடி வெளியிடப்படுகிறது. இதில் திரைப்பட இசையமைப்பாளர் பலராமின் இசைக் கச்சேரியும் நடைபெறுகிறது. எனவே இந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சித்தேஷ்வரரின் அருளைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முந்தைய கட்டுரைபெங்களூரில் கரிகரி உணவகம் திறப்பு
அடுத்த கட்டுரைஅப்பல்லோ மருத்துவமனையில் 8 வயது குழந்தைக்கு வெற்றிகரமான தனித்துவமான பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்