முகப்பு Bengaluru விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தில் 5 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க திட்டம்: பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ்

விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தில் 5 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க திட்டம்: பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ்

0

பெங்களூரு, மே 22: விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தில் 5 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளோம் என்று அச்சங்கத்தின் தலைவர் பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தெரிவித்தார்.


பெங்களூரு சிவாஜிநகர் ஓல்டு மார்கெட் சாலையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணபகவான், ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் புதன்கிழமை விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதன்முதலாக ரூ.1001 செலுத்தி ரமேஷ் அவர்கள் தன்னை சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டார். பின்னர் சங்கத்தில் பலரும் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய டி.ரமேஷ், திருவள்ளுவர் உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானவர். இருப்பினும் தமிழர்கள் அனைவரும் அவரை கொண்டாட வேண்டும். ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம், பொங்கலைத் தொடர்ந்து வரும் மாட்டுப் பொங்கலன்று, திருவள்ளுவர் ஜெயந்தியை கொண்டாடி வருகிறோம். முன்பு எஸ்.எஸ்.பிரகாசம் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்தி வந்தார். அவரை தொடர்ந்து எனது தலைமையில் திருவள்ளுவர் ஜெயந்தியை கொண்டாடி வருகிறோம். இதில் தமிழர்கள் கட்சி, மதம், ஜாதி மறந்து பங்கேற்று வருகின்றனர்.

இருப்பினும், திருவள்ளுவர் ஜெயந்தியில் இன்னும் திரளாக தமிழர்கள் கலந்து கொண்டு, நமது ஒற்றுமையைக் காண்பிக்க வேண்டும். அடுத்து நடைபெறும் திருவள்ளுவர் ஜெயந்தியில் சுமார் 25 ஆயிரம் தமிழர்கள் பங்குபெறச் செய்வது என முடிவு செய்துள்ளோம். அடுத்த ஜெயந்தியில் இதனைக் காட்டிலும் அதிக அளவில் தமிழர்களை பங்கேற்க செய்வோம். இதற்காக கர்நாடகத்தில் மட்டுமின்றி, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்க்க முடிவு செய்துள்ளோம். இந்த சங்கத்தில் சுமார் 5 லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்த்து, திருவள்ளுவர் ஜெயந்தியில் பங்குபெற செய்வது என திட்டமிட்டுள்ளோம்.

முதல் கட்டமாக சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கையை கோவிலில் தொடங்கி உள்ளோம். இனி அடுத்த கட்டங்களில் தேவாலயங்களில், பள்ளிவாசல்களில் உறுப்பினர்களை சேர்க்க முடிவு செய்துள்ளோம். அதே போல மாநில அளவில் பயணம் செய்து, அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்களை சங்கத்தின் உறுப்பினர்களாக‌ சேர்க்க உள்ளோம். திருவள்ளுவரைக் கொண்டாடுவோம். தமிழர்களாக ஒன்றுபடுவோம் என்றார்.

நிகழ்ச்சியில், சங்கத்தின் செயலாளர் வா.ஸ்ரீதரன், பொருளாளர் கோபிநாத், பி.விஸ்வநாதன், ஆதர்ஷா ஆட்டோ சஙகத்தின் செயலாளர் சம்பத், தன்னுரிமை மனமகிழ் மன்றத்தின் பொதுச் செயலாளர் க.இராஜசேகர், பி.எஸ்.வேலு, எம்.சீனிவாசன், டி.சுந்தரேசன், தேன்மொழியான், டி.கோகுல், சு.ராஜேந்திரன், குணசேகர், எம்.பாஸ்கர், ஆர்.சீனிவாஸ், ராஜா, யு.ரமேஷ், வின்சென்ட் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முந்தைய கட்டுரைஅல்டியம் இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் மேம்பாடு மற்றும் கல்வியில் அதன் முதலீட்டை விரிவுபடுத்துகிறது
அடுத்த கட்டுரைவெற்றி நடிக்கும் பகலறியான் தமிழ்த் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்: தமிழ் ஆர்வலர் முனைவர் எஸ்.டி.குமார்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்